வெட்கமில்லாமல் அலைகிறேன் உன் பின்னால் 555

என்னுயிரே...
தினம் தினம் நான் உன்
பின்னால் வரும்போதெல்லாம்...
உனக்கு வெட்கமாக
இல்லையா என்று கேட்கிறாய்...
உயிரே அந்த
வார்த்தைகளுக்காவது...
நீ என்னை பார்த்து
பேசுகிறாயே கண்ணே...
அந்த நிமிடம் நீ உனக்குள்
சிரித்து கொள்கிறாய்...
காகிதம் போல் நீ
என்னை கசக்கினாலும்...
என்னில் பதிந்திருக்கும்
உன் நினைவுகள் மட்டும்...
என்றும்
கசங்குவதில்லையடி...
உன் மூச்சுக்காற்றை
சுவாசிக்க வருகிறேன்...
உன் பின்னால்
வெட்கமில்லாமல்...
என்றாவது ஒருநாள் நீ
வெட்கத்தோடு என்னை பார்ப்பாய் என்று.....