பெண்ணே உறுதி கொள்

பத்தொன்பது வயதில் பரிபூரணமாய் வளர்ந்திட்டாய்
பகுத்தறியும் பக்குவத்தில் பட்டம் பல பெற்றிருப்பாய்
கற்பதிலும் வேலை பெறுவதிலும் வித்தகி நீயே
குடும்பத்தையே நீ குதுகலிக்க வைப்பவள் என்றாலும்
கயவனின் காதல் சொல்லில் கட்டுண்டாயே
காதல் எது காமம் எது கபடம் எதுவென
கன நேரம் கூட கணிக்க தெரியாமலா இருந்தாய்
அகத்தில் உள்ளோர் ஆலோசனை கூறுமுன்
அனலாய் ஆவாயே ஆனால் அயோக்கியன் முன்
அடிப்பட்ட பாம்பாய் ஆனது ஏனோ மகளே?
ஆடவருக்கு சமமாய் வாழ அடிகோலிய உன்னில்
கள்வனான காதலனை கழுத்தை சீவ துணியாதது ஏனோ
காமம் பொதுவென்றால் கற்பும் பொது தானே
ஆண் குறியை சிதைத்திருந்தால் அவன்
ஐம்பொறியும் கலங்கியிருக்கும் அவன் ஆட்டம் அடைபடும்
தலையில் சொருகும் ஊசியில் நீ கத்தியைக் கொள்
தறுதலையாய் திரியும் ஆடவனை தவறில்லை கொல்.
_ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (13-Mar-19, 7:32 am)
Tanglish : penne uruthi kol
பார்வை : 901

மேலே