கொலுசு

முத்து முத்து கண்மணி காலில்
முழங்க வேண்டும் கொலுசு,
கொத்து கொத்து சதங்கை பூட்டி
குலுங்க வேண்டும் கொலுசு,
தத்தி தத்தி நடக்கையில்
தாளமிடும் கொலுசு
தித்திப்பாக செல்வியின் வந்து
தேனை விடும் கொலுசு,
கால்கள் துள்ளி குதிக்கையிலே
ஜதி சேர்க்கும் கொலுசு,
கான மழை பொழிகையிலே
ஸ்ருதி சேர்க்கும் கொலுசு,
புத்தம் புது மலரின் மாசற்ற
புன்னகைக்கு தந்திட்ட கொலுசு
நித்தம் நித்தம் என் பெயரை
நினைக்க சொல்லும் கொலுசு,.
நித்திரை நீ புரிக்கையிலும் மனதில்
நின்றாடும் கொலுசு,
மொத்த வீட்டையும் மகிழ்ச்சியில்
மூழ்க வைக்கும் கொலுசு, உன் அன்னை
மெத்த ஆசையோடு அளித்த
வெள்ளி கொலுசு, என்
தேனமுதே நான் உனக்கு
அளித்த பரிசு தான் இந்த கொலுசு...!

இவண்
சங்கீதா தாமோதரன்

எழுதியவர் : sangeethaadamodharan (13-Mar-19, 11:13 am)
சேர்த்தது : Sangeethadamodharan
Tanglish : kolusu
பார்வை : 753

மேலே