வளையல் காப்பு
மேனி தனை அலங்கரிக்க புத்தாடை பூட்டி,
சிரம் தனை அலங்கரிக்க பூக்கள் சூட்டி,
கழுத்தினை அலங்கரிக்க மாலைகள் சூட்டி,
கரங்களை அலங்கரிக்க வளையல்கள் மாட்டி,
பந்துக்கள் யாவரும் தித்திப்பை ஊட்டி,
பாங்காய் மஞ்சளுடன், சந்தனமும் நெற்றியில் சூட்டி,
வேம்பினை வளைத்து காப்பு மாட்டி,,
முக்கனிகள் கொண்டு வரிசை தட்டை அலங்கரித்திட
மேளதாளத்துடன் பெரியோர்கள் ஆசி வழங்கிட: சிறு
பெண்டுகள் கரங்களிலும் வளையல்கள் குலுங்கிட,
பெருமைமிகு பதவியாம் தாய்மைதனை
பெற்றிட்ட உன்னை சிறப்பித்திடவே நடை
பெற்றதடி இவ்வளையல் காப்பு....!
இவண்
சங்கீதா தாமோதரன்