தாய்மையின் பெருமை
தன்னுயிரை இன்னொரு உயிராக்கி, கற்பதில்
தவழ்ந்தாடும் தளிராக்கி,
தினம், தினம் வளர்பிறையாக்கி,
தரணியில் விழும் முன் தாங்கி,
தன் குருதி தனை பாலாக்கி,
தளிரதன் பசிபோக்கி,
அதன் குறும்பினிலே மதிமயங்கி,
மல்லிகை தொட்டிலில் தாலாட்டி,
மடிதனிலே சீராட்டி,
வெண்ணிலவை துணையாக்கி,
வெள்ளிகிண்ணியில் சோறுட்டி,
பண்பட்ட மானிடனாக்கி,
பாசத்துடன் பணப்பை ஊட்டி,
பார்போற்றும் நாயகனாக்கி, பலர்
பாராட்ட கேட்டு மகிழும்
தெய்வ திருவுருவே தாய்!
இவண்
சங்கீதா தாமோதரன்