மகத்துவமான மகளீருக்கு வாழ்த்துக்கள்

தன்னில் ஒரு பாதியாய் கண்டான் பெண்மையை
தானே பெண் தேகம் எடுத்து மகிழ்ந்தான்
பெண்மையில் பேராற்றல் கண்டு அடங்கினான்
பெண்ணின் சபதத்தில் பெரும் போர் கண்டான்
பெண்ணின் சாபத்தால் பேரரசை இழந்து வாடினான்
பேரழகில் மயங்கி பெருங்காவியம் புனைந்தான்
பெற்றவளின் ஒரு சொல்லிற்கு கட்டுப்பட்டு நின்றான்
பெரு நதி நாட்டிற்கு பெண் பெயரை சூட்டினான்
நவீனத்தில் பெண்மையை சமமாக பாவித்தான்
சமமான பெண்ணால் உலகில் சமாதானம் பெறுவதே
சால சிறந்த வளர்ச்சியாகும்
போற்றுவோம் போற்றுவோம் பெண்கள் புகழ்பெறவே
ஏற்றுவோம் ஏற்றுவோம் அகிலத்தில் தீபம் அவர்களால்
அனைத்துக்கும் ஆணிவேரான பெண்மை ஆராதிப்போம்.
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (8-Mar-19, 5:10 am)
பார்வை : 169

மேலே