பெற்றோரை சிறப்பிக்க விழா
மக்கள் எங்களை வளமாய் ஆளாக்கி
மணமக்களாய் அலங்கரித்து
மணவாளன் கரங்களில்
மணிவிளக்காய் ஒளிரச்செய்து, மணமகன்கள்
மனதில் மகுடங்களாய் விளங்கி,
மக்கள் எங்களை பெருமையில் திழக்க செய்து
மணிவிழா காணும் மேதகு
மன்னனுக்கும், மன்னனின்
மனத்துக்கேற்ற மனையளுக்கும்.....!
சூழ சூழ
பிள்ளை படைகள் சூழ
ஆட ஆட
பேரப்பிள்ளைகள் நடனமாட,
போட போட
மணமகன்கள் தாளம் போட
பாட பாட
குயில்களோ இன்னிசை பாட
வந்தது வந்தது
அன்னை தந்தைக்கு "சஷ்டியப்ப பூர்த்தி" வந்தது
கண்டது கண்டது
நட்சத்திர கூட்டமோ வியந்து கண்டது
கேட்டது கேட்டது
ரவியும், மதியும் "சதாபிஷேகம் " காண வாரமும் கேட்டது
பூத்தது பூத்தது
மணமக்களை அலங்கரிக்கவே பூக்களும் பூத்தது
பொங்குது பொங்குது
அன்னை முகத்தில் வெட்கம் பொங்குது
தளர்ந்தது தளர்ந்தது
வெட்கம் கண்ட தந்தைக்கோ வீராப்பு தளர்ந்தது
தந்தது தந்தது
பிள்ளைகள் நாங்கள் இதனை காண தெய்வம் வரமும் தந்தது
நின்றது நின்றது
இவ்வற்புத காட்சியை தரிசித்திடவே ஒப்பில்லா பெருமாளும் எழுந்து நின்றது!
எங்களை
ஆளாக்கி வளமாக்கியது
தந்தையின் இருக்கரங்கள்,
தாலாட்டி சீராட்டியது
தாயின் அன்பு கரங்கள்; இன்று
எங்கள் அன்பாலும், பாசத்தாலும்
தாங்கி கொள்ள காத்துக்கொண்டிருப்பதோ பிள்ளைகள்
எங்களின் அன்பு கரங்கள்.....!
இவண்
சங்கீதாதாமோதரன்

