தெய்வத்தை வெல்லுமே தாய்மை

தன்னுயிரை இன்னொரு உயிராக்கி
தவழ்ந்தாடும் பூந்தளிராக்கி
தாண்டவமாடும் பொன்மயிலாக்கி
தாளா இன்பமதில் மூழ்கி
தினம் தினம் வளர்பிறையாக்கி; ஒவ்வொரு
திங்களிலும் உருமாறி,
தீங்கில்லா ஒளியாக்கி
தெவிட்டதும் உணவு தள்ளி
தெவிட்டா மழலையின்
தேவைதனை மனம் இருத்தி
தேடினாலும் கிட்டா வரமாம் தாய்மையே
தையலுக்கு கிடைத்த பெருமையாக்கி
தொல்லை பல தினம் தாங்கி,
தொட்டிலிடும் வரை வயிற்றில் தாங்கி; எழில்
தோற்றம் தனை உருவாக்கி; ஜனித்ததும்
தோளிலும், மனதிலும் தாங்கி, பிள்ளை முகம்தனில்
தெய்வத்தை கண்டு மகிழும் இனிமையே தாய்மை!

இவண்

சங்கீதாதாமோதரன்

எழுதியவர் : சங்கீதாதாமோதரன் (13-Mar-19, 3:19 pm)
சேர்த்தது : Sangeethadamodharan
பார்வை : 443

மேலே