தாரைவார்த்த தாயின் மனம்
இமை கூட்டில் கருமணியானாள்,
இருதய கூட்டில் வளர்ந்தாள்
இச்சை கொண்ட கவியானாள்
இசையில் உண்டான மழையானாள்,
இம்மையில் கிடைத்த பலனானாள்,
இருண்ட வானில் நிலவானாள்
இலக்குமி வடிவாய் பிறந்தாள்,
இல்லத்தில் எழிலாய் திகழ்ந்தாள்; இன்று
இல்லத்தரசியாய் என்னை பிரிந்து, தன்
இல்லற வாழ்வில் மிகிழ்ந்து களிக்க புறப்பட்டாள்,
இது இன்பத்தில் ஆழ்த்தும் சுகமோ, என்
இயலாமையால் வரும் கண்ணீரோ,
இன்பத்திலும் ஏன் இத்தனை
இனம்புரியா வேதனையோ,
இவளை எங்ஙனம் பிரிவேனோ,
இன்றே நான் மடியேனோ!
இவண்
சங்கீதாதாமோதரன்