அமைதியாக

அமைதியாக

பெருங்காதல் குலாவும்
வானும் நிலவும்

ஆற்றுநீர் கண்ணாடியாக
பார்த்து சிரித்து

மகிழ்ந்திருக்க இந்த
கூத்தை ரசித்தபடி

பலப்பேரை கரைசேர்த்த
கரையோர படகு

கடமையை செய்ய
காத்திருக்கு அமைதியாக..,

எழுதியவர் : நா.சேகர் (14-Mar-19, 7:31 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : amaithiyaaga
பார்வை : 389

மேலே