மீண்டும் ஒர் அடிமை
காண்கின்ற காட்சிகள்
கதைத்த கதைகள்
கேட்கப்பட்ட கேள்விகள்
அவல நிலை தெரியாமல்
அள்ளி வீசப்பட்ட நெருப்புக்கள்
மாயையில் சிக்கி
மனிதாபிமானமற்ற வார்த்தைகள்
தரவுகளை புறக்கணித்து
தவறான விவாதங்கள்
வளர்ச்சி
காகிதத்தில் மட்டும்
கசக்கப்பட்ட மாந்தர்களாய்
அவர்கள்....
தனியார் மயம் ஆகட்டும்
கல்வியும் கிடைக்காமலே போகட்டும்...
அடிபணிந்தே போகட்டும்...
மாக்களான மக்கள்
வேசிதனத்தை பரப்பி
விஷங்களை விதைக்கும்
ஆணவம் பிடித்த ஊடகமும்
கைகொட்டி
வீரு நடை போடுகிறது
மீண்டும் ஒரு
அடிமைக் கூட்டம் மீதேறி..