பெண்படைப்பை காத்திடுங்கள்

ஓலம் எழுகிறது
கருவறையில்
உலகம் உணர்கிறது
உள்ளே பெண்சிசுவென !

பொல்லாத பூமியில்
பொள்ளாச்சி மண்ணில்
நிகழ்ந்ததை எண்ணி
பிறக்கவே தயங்குது !

கொடூரத்தின் கூர்முனை
விபரீதத்தின் விளிம்பு
வன்முறையின் உச்சம்
செய்தவர்களின் நெஞ்சம் !

அழிக்கப்பட்டக் கோலம்
கசக்கி எறியப்பட்ட மலர்
இடிதாக்கிய இதயம்
பாதிக்கப்பட்டவர் நிலை !

அதிர்ச்சியில் அன்னைகள்
அச்சத்தில் தந்தைகள்
கலக்கத்தில் உள்ளங்கள்
தகித்திடும் தமிழ்நாடு !

கழுவேற்றிக் கொன்றிடுக
கொடுஞ்செயல் புரிந்தோரை !
தழும்பேறிட செய்திடுக
துணையாக நின்றோரை !

காவல்துறையை வேண்டுகிறேன்
கல்நெஞ்சர்களை தண்டியுங்கள்
கண்துடைப்பைத் தவிர்த்திடுங்கள்
பெண்படைப்பைக் காத்திடுங்கள் !

பழனி குமார்
15.03.2019

எழுதியவர் : பழனி குமார் (15-Mar-19, 10:47 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 564

மேலே