ஏய் காகமே

ஏய் காகமே!
பயமில்லையா உனக்கு...

தார்ச்சாலையில்
அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
தத்தி தத்தி நடக்கிறாய்
எதைக்கண்டாய் சாலையிலே...
குறுக்கே போகும் வண்டிகள்
இடித்துவிடும் வேளையில்...
இடைப்பட்ட நேரத்தை
சரியாய் கணக்கிட்டு
சட்டென்று பறக்கிறாய்...
எட்டி போகிறாய்...

இதயம் படபடத்து...
ச்சூ...வென்று விரட்டுகையில்
தலை திருப்பி கரைகிறாய்...
எகத்தாளம்... சரி தான் புரிகிறது...
வண்டிகள் மோதி
ஒரு காகமேனும் சாய்ந்ததுண்டா?

எழுதியவர் : சிவா. அமுதன் (15-Mar-19, 9:27 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 208

மேலே