நினைவில்லாமல் நீ அதற்கு

அதித பயத்தாலும் உண்டாகும் கோபம்
உச்சபட்ச ஆணவத்தாலும் வரும் கோபம்
எல்லையில்லா இயலாமையாலும் எகிரும் கோபம்
எவ்வித கோபம் உன்னில் வரினும்
தன்னிலை உணராது நீ செயற்படின்
நெருப்புப் பட்ட வெடியாய் சிதறுவாய்
மனம் என்பது மாபெரும் மரண பள்ளம்
நினைவில்லாமல் நீ அதற்கு அடிமையாயின்
தரம் திறன் உறுதி எதையும் சிதைக்க செய்யும்
அறம் நிறைந்த அரசன் முதலோர் இதனில் இடறி
தரம் தாழ்ந்து மாண்டோர் கோடி தெரிந்து தெளிவீர்.
----நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (17-Mar-19, 1:35 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 161
மேலே