இலைகளே சாட்சியாய்

நீயும் நானும்
சந்தித்த அந்த
ஒற்றை மரம்.....
நமக்காய் பூத்து இருக்கும்
நமக்காய் காத்துமிருக்கும்.....

நாம் சேர்ந்து இருக்கும்
நாட்களில் பூவொன்றை
நம்மில் உதிர்த்து
ஆசிர்வதிக்கும்......

நம் கண்வழி கசிந்த
காதலையெல்லாம்
பசும் வண்ணமாய் இலைகளெல்லாம்
பூசிக்கொள்ளும்......

கால ஓட்டத்தில் மரம்வழியே
அழியாக் நினைவுகளுடனும்
வழியாக் கண்ணீருடனும்
கடந்திருப்பேன் பலமுறை....

பின்னொரு நாளில்
தங்கநாற்கர சாலைக்காக
தரைமட்டமாய் ஆனது - நம்
காதல் விருட்சம்....

காதல் நினைவுகளைச்
சுமந்த இலைகளெல்லாம்
சருகாய் கருக....
பிரிந்தது கூட இத்தனை
வலிக்கவில்லை........

வலித்து துடிக்குது உயிர்
வேரோடு வீழ்ந்த
விருட்சத்தால்.......

எழுதியவர் : முகில் (17-Mar-19, 5:04 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 28
மேலே