எழுத்துகாமில், கவிஞனுக்கும், வாசகனுக்குமான முக்கிய கருத்துப்பரிமாற்றம்

அனைத்து எழுத்து.காம் வாசகர்களுக்கும், கவிஞர்களுக்கும் மற்றும் எழுத்து சார்ந்த படைப்பாளிகளுக்கும் A. பிரேம் குமார் -ன் வணக்கங்கள்.

நான் கதை, சிறுகதை, கட்டுரை இவைகளைவிட, அதிகம் கவிதைக் கடலில் நீந்துபவன், நீந்தத் துடிப்பவன். ஆனால், அவைகளையும் ஆர்வத்துடன் படிப்பவன்.

இப்படைப்பு, கவிஞர்களின் உள்ளத்தேடலை
முழுவதுமாய் இல்லாதுபோனாலும்
முடிந்தவரை வெளிக்கொண்டுவர முயற்சிக்கும்.

இப்படைப்பு ஒரு வாசகனுக்கும், கவிஞனுக்கும் உள்ள நற்கருத்துப்பரிமாற்றமே. (வேண்டுமானால், படைப்பை வெளியிட்டபிறகு, ஒரு நல்ல கருத்துயுத்தமாகவும் மாற வாய்ப்பிருக்கலாம்).

இப்படைப்பில், நான் யார் மனதையும், எவ்விதத்திலும், நேராகவோ, மறைமுகமாகவோ புண்படுத்தும் எண்ணத்தில் எழுதவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏனெனில், இன்றும், இதுவரையும், இனியும், இத்தளத்திலுள்ள அனைவரையும் தோழர்/தோழி களாகவே நான் நினைப்பவன்.

படைப்பின் தொடக்கம்...............

நான் படைத்த, கவிஞன் (பகுதி - 2 ) கவிதை,

""""
பலனேதும் பாராமல் - நற்க்கருத்துயுத்ததில்
பரமனுக்கும் பணியாமல்
பணியாய் நன்செய்து
கவிபடைப்பான் பாருக்கு
- கவிஞன்
- A. பிரேம் குமார்

"""""

கவிஞன், ஒரு கர்மயோகியைப்போன்று; செய்யும் பணியில் தனக்கான பலனை எதிர்ப்பார்க்காது, உலகுக்கு நன்மை செய்துவிட்டு, அடுத்தப்பணிக்காக, முடித்தப்பணியிடத்தைவிட்டு நழுவிச்செல்பவன். அவன் அறிவை, யாராலும், ஒரு வட்டத்துக்குள் அடைக்கமுடியாது.

நண்பர், திரு.பரிதி முத்துராசன் அவர்கள், இக்கவிதைக்கு மனம் திறந்து கருத்து தெரிவித்தார்.

"பலனேதும் பாராமல் - நற்க்கருத்துயுத்ததில் -இந்த வரிகள்தான் என்னை மீண்டும் எழுத வைத்தது வாழ்த்துக்கள்" - பரிதி முத்துராசன்.

அவருக்கு பதில்கருத்தை நான் வழங்க முற்ப்பட்டபோது, பிறந்தது என் அடுத்த கவிதை...

""""""""
கவிஞர் உள்ளம் (பகுதி - 3)

மதிப்புபெண் நாடாமல்
கவிதையின் கருத்தை நாடி - அதுதரும்
வாசகர் கருத்தைத் தேடி
வாசம் கொள்வது
கவிஞர் உள்ளம்.

மதிப்பற்ற மதிப்பெண்ணை
மதமென அழைப்பான்
கவிஞன்.
-A. பிரேம் குமார்

"குறிப்பு: இவ்விடத்தில், மதம் என்பது மதம்பிடித்தலை குறிக்கும்"

""""""""

இக்கவிதைக்கு கருத்து தெரிவித்த, அன்புக்கும், மரியாதைக்குமுரிய தோழர் திரு .மு. ராமச்சந்திரன் அவர்கள், தன கருத்துமூலம் சில அறிவுப்பூர்வமான கேள்விகளை கேட்டிருந்தார்.

""""""
A பிரேம் குமார் அவர்களே,
எந்த ஒரு படைப்பாளியும், அது வியாபார நோக்கமாக இருந்தாலும் பண முடிப்பிற்கு அப்பாற்பட்டு எதிர் பார்ப்பது பரிசும் / பாராட்டும் அது தான் ஒரு படைப்பாளிக்கு ஊக்கத்தை கொடுக்கும் - இங்கு பாராட்டு என்பதை மதிப்பெண் அளவுகோலில் வைத்துள்ளார்கள் - படிக்கும் பொழுது சிலர் அந்த பகுதியை கவனிக்காமல் இருக்கலாம் - ஏன் நானே கூட சில கவிதைகளுக்கு கருத்து சொல்ல தெரியாமல் மதிப்பெண் கொடுத்து வந்திருக்கிறேன். அதனால் மதிப்பெண் எதிபார்த்தும் நல்ல கவிதைகளை படைக்கலாமே..
- மு.ராமசந்திரன்.
"""""""

வேறுசில எழுத்துப் படைப்பில் மும்முரமாக இருந்த நான், அவருக்கு பதில்கருத்தாய்,

""""""
மிக்க நன்றி. எனக்கு மிகவும் பிடித்தமான, கேள்விகள் கொண்ட கருத்தை படைத்தமைக்கு.
இவ்வாறு, கருத்துப்பரிமாற்றமுள்ள கருத்தை விரும்புபவன் நான்.
இதுவரைக்கும் , உங்கள் கேள்விக்கான பதிலை நான் கொடுக்கவில்லை. தயவு செய்து பொறுங்கள், தயாரித்து கொடுக்கிறேன் - A. பிரேம் குமார்
""""""
- என்று கூறியிருந்தேன்.

இப்போது, நான் அக்கேள்விக்கான பதிலை இங்கு தருகிறேன்,

முதலில் என்னை தவறாக எண்ணவேண்டாம். கவிஞன் மதிப்பெண்ணை ரசிப்பவன் அல்ல. இதை மனம் திறந்து, உள்ளக்கவிஞனின் இருப்பிடத்தில்நின்று உரைக்கிறேன்.
உள்ளக்கவிஞனின் ஆனந்தம் மற்றும் ஊக்கம் எதில் உள்ளதென்றால்,

உண்மையில், அவன் எழுதிமுடிக்கும் ஒரு சிறந்த கவிதை, முதலில் அவனையே ஆனத்தப்படுத்தும் (இத்தகைய ஆனந்தத்தை எனக்கு வார்த்தைகளால் விளக்கத் தெரியாது, மன்னிக்கவும்). இவ்வாறு இதில் ஆனந்தம் கொள்கிறான்.

பிறகு, அக்கவிதையின் "மெய்ப்பொருள்" அறிந்தோ (அ) அறியவிருப்பம் தெரிவித்தோ, வாசகன் அக்கவிதைக்கு கருத்தோ (அ) விமர்சனமோ செய்கையில், அதில் மேலும் கவிஞனுக்கு ஆனந்தமும், ஊக்கமும் கூடும். வாசகனுடனான கருத்துரையாடலும் நீளும்.

கருத்துரையாடலின் நிறைவாக,

கவிஞனும், கவிதையை வாசிப்பவனும் ஒரு நல்ல முடிவுக்கு வந்தவுடன்,
கவிஞனுக்கு, சிந்தனைமிக்க, பயனுடைய நற்ச்செய்தியை தன் கவித்திறன் மூலம் வாசகனுக்கு அளித்தபெருமையில் "பேரானந்தம்" கொள்கிறான். அத்தகைய நல்ல கருத்துப்பரிமாற்றங்களுக்கு இடையிலேயே, சில சமயம், கவிஞனின் அடுத்த கவிதைக்கான மூலப்பொருளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பல உண்டு.

வாசகனும், ஒரு நல்ல கவிதையை நம் தாய்மொழியில் கண்டோம், படித்தோம், பாடி உரையாடினோம் என்று மகிழ்ந்து, மன நிறைவுகொண்டு பரவசமடைகிறான்.

குறிப்பு: கவிஞன் கசப்பான கருத்துக்களையும் மனக்கசப்பில்லாமல் வரவேற்ப்பவனே. அது, படைப்பாளியான அவனுக்கு சில அனுபவங்களைத் தருவதோடு, மேலும் உலகின் பல கோணங்களை அவனுக்கு எடுத்துக்காட்டுகிறது. ஆதலால், அவன் மேலும் அறிவில் சிறந்தவனாகிறான்.

மனதில் கைவைத்து இப்போது சொல்லுங்கள், ஆனந்தம் எங்குள்ளது என்று.
மதிப்பெண் கொடுத்துவிட்டு மறைந்துபோவதிலா?
இல்லை,
அருமையான அறிவான கருத்துப்பரிமாற்றம் கொண்டு ஆனந்தம் கொள்வதிலா?

சற்று யோசித்து பாருங்கள், இத்தளத்திற்கு ஏன் வந்தீர்கள் என்று,
மதிப்பெண் கொடுப்பதற்க்கா?
இல்லை,
கருத்துப் பரிமாற்றம் செய்து, மனதில் அமைதியோ (அ) ஆனந்தமோ கொள்வதற்கா?

எதில், நல்ல கருத்துப்பரிமாற்றமும், அமைதியும், ஆனந்தமும் கிட்டும்,
மதிப்பெண்ணிலா? இல்லை
கருத்தை பரிமாற்றம் செய்வதிலா?

எழுது.காமில் பதிவு செய்யும்போது, யாரிடமும் சொல்வதில்லை இங்கே மாதம் மாதம் கவிதைப்போட்டி நடத்தப்படுமென்று. அவ்வாறு அவர்கள் சொல்வாறேனால், 50% பேர்கள் உள்ளே நுழைவதற்கு முன்னரே, மேலும் சில புதியவர்கள் கவிதை எழுத முயற்சிப்பதற்கு முன்னரே, எதுக்குடா வம்பென பதிவு செய்யாதும் விட்டிருப்பார்கள்.
அவ்வாறில்லாமல் எழுது.காம், தமிழ்மக்கள் தங்கள் கருத்துப்பரிமாற்றலை கவிதைகளாலும், கட்டுரைகளாலும் இங்கே தொடரட்டும் என்று நினைத்து ஆரம்பித்திருப்பார்.

குறிப்பு: உதாரணமாக, "புதுக்கவிதை"-யை சொடுக்கிட்டு, பட்டியலுக்கு கீழே பாருங்கள், எத்தனை பதிவேசெய்யாத வாசகர்கள், மதிப்பெண் கொடுக்காமலே தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் ஆர்வத்தை முயற்சித்திருக்கிறார்கள் என்று. எழுது.காம் அத்தகைய கருத்து ஆர்வத்திற்காகவே அனுமதித்துள்ளது.

ஒன்று மட்டும் உறுதி,
நல்ல கருத்துப்பரிமாற்றல் இருந்தால்
மிக நல்ல படைப்பாளிகள் கிடைப்பர்;
மதிப்பெண்ணே முக்கியமென்றால்
மனனம்செய்துப் படிக்கும் குழந்தைகள் கிடைப்பர்.

(நான் தனிப்பட்ட யாரையும் குறைகூறவில்லை, என் அறிவுக்கு எட்டிய நல்லதை கூறுகிறேன்)

என்னைபொருத்தவரையில்,
மதிப்பெண்,
மதிப்பற்றது.
ஆனால், இத்தளத்தில், நல்ல படைப்பாளிகளை உருவாக்க, நல்ல தமிழ்ப் படைப்பாளியை அனைவரும் மனம் திறந்து பாராட்ட, ஒரு நல்ல சூத்திரமும் உண்டு.

இத்தளத்தில் அட்டவணைகள் அதிகம் உண்டு.
ஆதலால், அது என்ன சூத்திரம் என்றால்,

"நண்பர்கள்" என்பதை சொடுக்கிட்டு,
பிறகு "கவிதை"யை சொடுக்கிட்டு,
பிறகு, இந்த வாரமோ, இந்த மாதமோ சொடுக்கிட்டு,
கட்டங்களை கூர்ந்து கவனியுங்கள்.

தனிப்பட்ட ஒவ்வொருவரின் கருத்துப்பரிமாற்ற ஆர்வத்தை கூர்ந்து கவனியுங்கள்.
"பார்வை" - படைப்பாளியின் கவிதையை பார்வையிட்டவர்கள் எத்தனை பேர்.
"கருத்து" - படைப்பாளி எத்தனை பேருக்கு, படைக்கும் ஆர்வத்தை அதிகரிக்க/ஊக்குவிக்க மற்றும் தமிழை வளர்க்க கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழை வளர்க்க, நல்ல கருத்துப்பரிமாற்றம் மேற்கொண்ட படைப்பாளி = ratio of ("கருத்து" : "பார்வை")

(பதிவு செய்துள்ள அனைத்து நண்பர்களும் இந்த அட்டவணையில் உள்ளதாகவே நினைக்கிறேன்)

படைப்பாளியை அதிகம் ஊக்குவிக்க, வாசகனுடனான நற்கருத்துப்பரிமாற்றலோ (அ) நற்கருத்துயுத்தமோ-தான் மிக முக்கியம்.
அது தமிழையும் வளர்க்கும். ஆகையால், தமிழ் வளர்ப்பதில் எவ்வாறு படைப்பாளிக்கு பங்கு உண்டோ, அவ்வாறே, வாசகனுக்கும் தமிழ் வளர்ப்பதில் பங்குண்டு.

தொடரும்......

இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க


எழுதியவர் : A பிரேம் குமார் (15-May-12, 12:28 am)
சேர்த்தது : A. Prem Kumar (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 309

5 (5)
முந்தய படைப்பு அடுத்த படைப்பு
ஆங்கிலத்தில் எழுத

இந்த பொத்தானை அழுத்தவும்.

தங்கள் கருத்துக்களை இங்கு பதிவேற்றுங்கள்...
user photo
கவின் சாரலன் • 16-May-2012 9:36 am
கவிப்ரிய பிரேம்குமார் தாங்கள் இந்த
ஆராய்சிக் கட்டுரையில் பல் வேறு
கருத்துக்களை நுணுகி ஆராய்ந்து
சொல்லியிருக்கிறீர்கள் எழுத்தினை
எண்கொண்டு தீர்மானிக்கலாமா என்ற
நியாயமான கேள்வியை கேட்காமலே கேட்டிருக்கிறீர்கள். தேர்ந்தவர்கள்
கவிதையை தெரிவு அல்லது தேர்வு
செய்வதே சாலச் சிறந்தவழி நொடிக்கு
நூறு கவிதை பதிவாகும் தளத்தில்
இது சாத்தியமில்லை அதன் மாற்றாக
எண் குறியீட்டிலான இந்த பொதுவான
சாதாரண பிரபல்யமான (popular ) வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம்
ஆயினும் இதன் சாதாரணத் தன்மையை நீக்கும் பொருட்டு நல்ல
முயற்சி நல்ல படைப்பு சிறந்த படைப்பு
சூப்பர் நெகிழவைக்கிறது போன்ற
விமரிசன அடையாளங்களை யோசித்து
நட்சத்திரங்களுக்குள் அமைத்திருக்கிறார்கள் பின் இந்தமுறை
சரிதானா ? வேறு வழியில்லை
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
மேலும் சொல்கிறேன் பொறுத்திடவும்
----அன்புடன்,கவின் சாரலன்

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
கவின் சாரலன் • 16-May-2012 5:34 pm
மேலும் சிலர் பல கணக்குகளை திறந்து
வைத்துக் கொண்டு தங்களுக்கு தாங்களே
நட்சத்திர நன்கொடை வழங்கி தங்கள்
கவிதையை சிறந்த படைபென்றோ
பரிசிற்க்குரியதாகவோ முன் நிறுத்திக்
கொள்கிறார்கள் இந்த போலியான
செயற்கையான அங்கீகாரத்தால்
இவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்
கொள்வதோடு எழுத்தையும்
சக கவி நண்பர்களையும் ஏமாற்றுகிறார்கள் clever souls இந்த
மாதிரி எத்தனை ஆத்மாக்கள் உலவுகிறதோ தளத்தில்.இவர்களுக்கு
நாம் அனைவரும் அளிக்கவேண்டிய
"மதிப்பெண்" 420 . பழுது படைப்பானால்
என்ன பரிசானால் என்ன யாருக்கு
லாபம் ? இது ஒரு இலக்கிய மோசடி
இதனால் நல்ல கவிதை படைக்கும்
நற் கவிஞன் தனக்குரிய இடம்
அங்கீகாரம் கிடைக்காமல் மனம்
வெதும்பி எழுதுவதை நிறுத்தி விடுகிறான் இது எழுத்துக்கும் நட்டம்
கவிஞனுக்கும் இழப்பு ஆதலினால்
இந்த நட்சத்திர எண் குறியீடு மதிப்பீடு
குறை பாடுடைது என்பது என் மிகவும்
தாழ்மையானது தவறானவர்கள் அதை
தவறாகப் பயன் படுத்துகிறார்கள் அதனால் நற் கவிஞனின் வளர்ச்சியும்
எழுத்தின் வளர்ச்சியும் தரமும்
பாதிக்கப் படுகிறது ஆகையால்
பிரேம்குமாரின் இக்கருத்தின் முதல்
பகுதியை ஏற்கிறேன்
படைப்பாளியை அதிகம் ஊக்குவிக்க, வாசகனுடனான நற்கருத்துப்பரிமாற்றலோ (அ) நற்கருத்துயுத்தமோ-தான் மிக முக்கியம்.
இரண்டாவது பகுதி யுத்தமாகத் தொடங்கி காழ்ப்பிலும் கசப்பிலும்
அசிங்கமாக சேறு வாரி இறைப்பதிலும்
முடியும் ஆதலினால் நாகரிகமான
கருத்துப் பரிமாற்றம் கவிதையையும்
கவிஞனையும் இந்த இனிய எழுத்துத்
தளத்தையும் வானளவுக்கு உயர்த்தும்
கருத்தே சாலச் சிறந்தது
யாமறிந்த இணையதளம்களிலே
எழுத்தினைப் போல் ஓர் இனியதளம்
எங்கும் காணேன்
ஏன் ?
எழுத்து --அழகிய தமிழ் சொர்க்கம்
அங்கே தமிழ்க்கு அமுதென்று பேர்
----அன்புடன்,கவின் சாரலன்

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
A. Prem Kumar • 16-May-2012 7:52 pm
சமூகத்திற்கு நன்று செய்வோம்.

ஐயா,
தயவுசெய்து, நான் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நானறிந்த வரையில், நான் சிந்தித்து அனைத்து இடத்திலும், "நற்க்கருத்துயுத்தத்தை" என்று கூறியிருக்க வாய்ப்புள்ளதே இன்றி, "பொதுவாக கருத்துயுத்தம்" என்று கூறியிருக்க வாய்ப்பிருக்காது.

ஏனெனில்,
"பொதுவாக கருத்துயுத்தம்" - இதில் வேண்டுமானால், அநாகரீகமான பேச்சுகள் அரங்கேற வாய்ப்புள்ளது.

"நற்க்கருத்துயுத்தம்" - இதில் நாகரீகத்துடன் மட்டுமே, தங்கள் கருத்தையோ, அல்லது எதிர்ப்புக்கருத்தையோ எடுத்து வைக்கவேண்டும்.

அன்புடன், A. பிரேம் குமார்

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
A. Prem Kumar • 16-May-2012 6:28 am
பல நல்ல கருத்துக்களை கருத்துரையாடலில் பகிர்ந்துகொண்ட,
திரு மு ராமச்சந்திரன், திரு தமிழ்தாசன், திரு சங்கரன் ஐயா, திரு ஈஸ்வர், திரு பொள்ளாச்சி அபி, திரு Dr. கன்னியப்பன், திரு வினாயகமுருகன், திரு தம்பு மற்றும் தோழி புதுவை காயத்ரி ஆகிய அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இப்படைப்பின், "எழுத்து.காமில், கவிஞனுக்கும், வாசகனுக்குமான முக்கிய கருத்துப்பரிமாற்றல் (பகுதி - 2 )" -டையும் பார்த்து, தாங்களும் நாளைய இவ்எழுத்துத் தளத்திற்கு பாதை அமைக்கலாம் என நம்புகிறேன்.

அன்புடன், A. பிரேம் குமார்

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
தம்பு • 15-May-2012 9:47 pm
அன்புள்ள பிரேம்குமார்.....

உங்கள் பதிவிற்கு முதல்
நன்றி.....

வயதில் மூப்பென்று
நினைப்பவர்கள்
ஒருசிலர்....வளரும்
இளைஞர்களாகிய எங்களது
பல
படைப்புகளில்
(திருவிளையாடல்) பாணியில்
பொருட் குற்றம்
சொற்க் குற்றம்

என்று முரண்படவேண்டும்
என்று முனைகிறார்கள்..... இதை
அவர்கள்
பக்குவமாக
உண்மையாக உள்ளதை
சொல்ல.... அவர்களால்
சிறந்த வழியை
கண்டுகொள்ள முடியவில்லைப் போலும்...!

எழுத்துப் பிழைகள்
இருப்பதை
சுட்டிக்காட்டாமல்
காட்டமாக
கருத்துச் சொல்லிப்போவதை
மன்னிக்க முடியாது....!

இந்த
கவிதைத்
தளம்.... அனைவரும்
தமது
மொழித்திறமை....( கவிதை.... கட்டுரை.... சிறுகதை.....)
என்று எழுதி வளர சிறந்த களமாக
இருக்கட்டும்......!

சண்டைபோட்டு
சமர்க்களமாக்க வேண்டாம்....!

அனைத்து
எழுத்துலக நண்பர்களுக்கெல்லாம்
இது
சமர்ப்பணம்.....!

நட்புடன்
தம்பு....!

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
Dr.V.K.Kanniappan • 15-May-2012 8:40 pm
அன்புள்ள பிரேம்குமார்,
உங்கள் 'கவிஞனுக்கும் வாசகனுக்குமான கருத்துப் பரிமாற்றம்' வாசித்தேன். 'எழுத்து' தளத்தில் பெரும்பாலும் கவிதை படைப்பவர்களே கருத்துப் பரிமாற்றமும் செய்கிறார்கள். பெரும்பாலான கவிஞர்களும் கருத்துள்ள கவிதைகளையே படைக்கவும் செய்கிறார்கள்.
படைப்பாளிகள் ஒவ்வொருவரும் வயதிலும் அனுபவத்திலும் வித்தியாசப்படலாம். நல்ல கருத்துள்ள கவிதைகளை மனமார வெளிப்படையாகப் பாராட்டி கருத்தைத் தெரிவிக்கலாம்.

யாரும் தங்கள் கவிதைக்கு தாங்களோ தங்களைச் சேர்ந்தவர்களோ மதிப்பெண் தரக்கூடாது. கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
சரியான கருத்துக்களோ, கவிதை வடிவமோ இல்லை என்று கருதினால் மனம் புண்படாவண்ணம் தனிப்பட்ட விடுகையில் தெரிவிக்கலாம்.
தனிப்பட்ட முறையில் சிறுவன் என்றோ, கிழவன் என்றோ யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். 'எழுத்து' தளம் நாம் அனைவருக்கும் கருத்துக்களைப் பதிவு செய்ய ஓர் நல்ல வாய்ப்பு.
நட்புடன்,
வ.க.கன்னியப்பன்

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
A. Prem Kumar • 16-May-2012 6:08 am
ஐயா தங்கள் கருத்து ஒவ்வொன்றும் குழப்பத்தை துளியும் கொடுக்காது தெளிவாக உள்ளது. நன்றி.

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
தமிழ்தாசன் • 15-May-2012 2:48 pm
நண்பருக்கு வணக்கம்,
இந்த பதிவுக்கு என்னிடம் சொல்ல கருத்துகள் இல்லை. நன்கு ஆராய்ந்து என் மனம் சரியென்று போகும் போக்கிலே நான் போகிறேன். பல நேரங்களில் பேசி தீர்ப்பதை விட அமைதி கொள்வதில்தான் என்னால் ஆனந்தம் அடைய முடிகிறது. என்னை பொறுத்தவரை ஒரு கவிதையை எழுதி வாசகன் கையில் தரும் உரிமை உனக்கு இருந்தால் அதை படிக்காமல் கிழித்து போடும் உரிமை வாசகனுக்கு இருக்கிறது. பாரபட்ச்சம் பார்க்காமல் பாராட்டை ஏற்று கொள்ளும் நாம் இது போன்ற தீய விமர்சனங்களையும் சமநிலையோடு ஏற்று கொள்ள வேண்டும்.

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
A. Prem Kumar • 16-May-2012 6:05 am
"ஒரு கவிதையை எழுதி வாசகன் கையில் தரும் உரிமை உனக்கு இருந்தால் அதை படிக்காமல் கிழித்து போடும் உரிமை வாசகனுக்கு இருக்கிறது. பாரபட்ச்சம் பார்க்காமல் பாராட்டை ஏற்று கொள்ளும் நாம் இது போன்ற தீய விமர்சனங்களையும் சமநிலையோடு ஏற்று கொள்ள வேண்டும்"

அருமையான கருத்தை பதிவு செய்துள்ளீர். அனைவருக்கும் உபயோகமுள்ள கருத்து தங்களுடையதும்.

பகுதி - 2 படிக்கவும்.

reply Vote Up Vote Down 1 வாக்குகள்
user photo
கவின் சாரலன் • 15-May-2012 2:48 pm
கவிப்பிரிய பிரிய பிரேம் குமார்
சத்தியத்தை சுட்டிக்காட்டுகிற மனசாட்சியை தொடுகிற ஆழ்ந்த
ஆராய்சி அலசல் கட்டுரையை
சரியான சமயத்தில் வெளியிட்ட
தங்களை வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன் மனம் உவந்து பாராட்டு
கிறேன் உங்கள் ஆராய்ச்சி அலசல் :
" தனிப்பட்ட ஒவ்வொருவரின் கருத்துப்பரிமாற்ற ஆர்வத்தை கூர்ந்து கவனியுங்கள்.
"பார்வை" - படைப்பாளியின் கவிதையை பார்வையிட்டவர்கள் எத்தனை பேர்.
"கருத்து" - படைப்பாளி எத்தனை பேருக்கு, படைக்கும் ஆர்வத்தை அதிகரிக்க/ஊக்குவிக்க மற்றும் தமிழை வளர்க்க கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழை வளர்க்க, நல்ல கருத்துப்பரிமாற்றம் மேற்கொண்ட படைப்பாளி = ratio of ("கருத்து" : "பார்வை")

(பதிவு செய்துள்ள அனைத்து நண்பர்களும் இந்த அட்டவணையில் உள்ளதாகவே நினைக்கிறேன்)
5 sankaran ayya
1140
1533 191838 1427 15-Jul-2011
நீங்கள் சொன்னபடி நண்பர்களில் எனது
அட்டவனையை எடுத்துக்காட்டாக
தந்திருக்கிறேன் பலகவிதைகளை
1533 தேர்வுபெற்று 1427 கருத்தினைப்
பெற்றிருக்கின்றன தேர்வும் கருத்தும்
கைகோர்த்து செல்கின்றன பொருள்
ஒவ்வொரு கவிதைக்கும் தேர்வுடன்
கருத்தும் கிடைத்திருக்கிறது இந்த
புள்ளி விவர அட்டவணை மூலம்
ஒரு சுய அலசல் செய்து கொள்ளலாம்
மேலும் நீங்கள் சொன்னது ஈஸ்வர்
மு. ரா கருத்தினை பற்றி இத்துடன்
இணைத்து தனிக்கட்டுரையில் சொல்கிறேன்
---அன்புடன்,கவின் சாரலன்



Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
A. Prem Kumar • 16-May-2012 5:54 am
தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா.

ஒரு சிறு திருத்தம், "தேர்வோடு கருத்தை ஒப்பிடாதிர்கள்"; "கருத்தோடு பார்வையை ஒப்பிடுங்கள்"

(கருத்து / பார்வை) x 100 = ____ %

5% என்றால் கூட நன்றே.

யார் அதிக சதவிகிதமோ,அவர் இத்தளத்தில், தமிழ் வளர்க்க அதிக கருத்துப்பரிமாற்றம் செய்கிறார் என்று பொருள்.

பகுதி - 2 படிக்கவும்.

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
பொள்ளாச்சி அபி • 15-May-2012 2:42 pm

மின்சாரம் மூலம் விசிறியை இயக்கி காற்றுவாங்கிக் கொண்டிருந்த நாம்.இப்போது காற்றாலை மூலம் மின்சாரம் பெறும் நியூட்டனின் விதிபோல,எல்லா விஷயங்களுக்கும் இருபக்கம் உண்டு.
மதிப்பெண் வேண்டும் என சிலரும்,அது வேண்டாம் என சிலரும் இருதரப்பிலும் உள்ள நியாயங்களின் அடிப்படையிலேயே சொல்கிறார்கள்.அதை நாமும் முழுவதும் ஒத்துக்கொள்ளவோ நிராகரிக்கவோ முடியாது.
நமக்கு இப்போது அது பிரச்சினையல்ல.
மதிப்பெண் இடுவது அல்லது கருத்து மட்டுமே சொல்வது,
மதிப்பெண்ணை எதிர்பார்ப்பது அல்லது எதிர்பாhக்கக் கூடாது
தாமே போட்டுக் கொள்வது அல்லது அடுத்தவர் போடுவது
கவிஞனை அடையாளம் காட்ட மதிப்பெண் பயன்படுகிறது அல்லது பயன்படவில்லை

இது எல்லாமே அவரவர் சிந்தனையிலிருந்து நியாயப் படுத்தப்படுகிறது அல்லது எதிர்க்கப்படுகிறது.
இவ்வாறு இருகொணங்கள் உள்ள இந்தச்சிக்கலிலிருந்து விடுபட படைப்பாளிகள் என்ன செய்யவேண்டும்.? அல்லது என்ன செய்யமுடியும்.?
இதில் எது நடந்தாலும் அதன் விளைவுகள் நன்மையை ஏற்படுத்துகிறதா.? அல்லது தீமையை ஏற்படுத்துகிறாதா.?, என்று பார்த்துவிட்டு அதற்கேற்ப நமது பின் இயக்கத்தை தீர்மானிக்கலாம்.
எது இந்தத் தளத்தில் உண்மைக்கு மிக அருகில் இருக்கிறதோ அது மட்டுமே வாழும். அவ்வாறில்லாதது தானாய் மறைந்துபோகும்.சர்வைவல் ஆஃப் பிட்னெஸ் என்பதுபோல இதுவும் இயக்கவியல் விதிதான்.
எனவே இதற்காக படைப்பாளிகள் கவலைப்படாமல் தங்கள் படைப்புகளை அரங்கேற்றுங்கள்.
இந்த சமூகக் கூட்டங்களால் நிறைந்த இந்த உலகத்தின் இயக்கத்திற்கு எதெல்லாம் உதவுகிறதோ அது மட்டுமே வரலாறாய் நீடிக்கும்.அது மட்டுமே வாழ்வதற்கு இந்த உலகம் அனுமதிக்கும்.
படைப்பாளிகளுக்கு இங்கு நான் இறுதியாக என் பார்வையில் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான்.
அது புதுவை காயத்திரி குறிப்பிட்ட தமிழன்பனின் மேற்கோள். “பயன் கருதா பணிகளைச் செய்பவனின் பாதங்களை நோக்கி பாராட்டுக்களே பாதையமைக்கும்.”அப்போது நாமும் நல்ல படைப்பாளிகளை அடையாளம் காண்போம்.!
அன்புடன் பொள்ளாச்சி அபி.!





Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
கவின் சாரலன் • 15-May-2012 5:59 pm
விரல்களில் துடிக்கும்
ஆத்திரத்தை
விடுதலை செய்வோம்..
----இதையும் தமிழ் அன்பன்தான்
எழுதியிருக்கிறார் ஈஸ்வர் கூறியிருக்கும் சில கருத்துக்களை
கூர்ந்து கவனிக்கவும் அதிர்ச்சியாகவும்
இருக்கிறது கவலை அளிப்பதாய் உள்ளது.எழுத்தின் சீரும் சிறப்பும்
தாழாது எடுத்துச் செல்ல என்ன வழி ?
யோசிக்கவும் எழுதவும்
பட்டுக்கோட்டையாரை உங்களுக்கு
நினைவு படுத்துகிறேன்
"தானே எல்லாம் மாறிவிடும் என்பது
பழைய பொய்யடா "
---அன்புடன்,கவின் சாரலன்
reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
A. Prem Kumar • 16-May-2012 5:42 am

"இதில் எது நடந்தாலும் அதன் விளைவுகள் நன்மையை ஏற்படுத்துகிறதா.? அல்லது தீமையை ஏற்படுத்துகிறாதா.?, என்று பார்த்துவிட்டு அதற்கேற்ப நமது பின் இயக்கத்தை தீர்மானிக்கலாம்.


எது இந்தத் தளத்தில் உண்மைக்கு மிக அருகில் இருக்கிறதோ அது மட்டுமே வாழும். அவ்வாறில்லாதது தானாய் மறைந்துபோகும்"

சரியான யோசனையே, அபி அவர்களே.

பகுதி - 2 படிக்கவும்

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா • 15-May-2012 12:19 pm
நண்பர் பிரேம் குமார் அவர்களே , கருத்துக்கள் மதிப்பெண்கள் என்பது ஒரு கவிங்கனுக்கு கிடைக்கும் சிறந்த அங்கீகாரம் என்பது உண்மை ஆனால் இங்கு அது தவறான முறைகளில் பலரால் கையாளப்படுகிறது என்பது உண்மை.. ஒரு படைப்புக்கு மதிப்பெண் மற்றவர்கள் தரவேண்டும் அனால் சிலர் இரண்டு மூன்று பக்கங்களை பதிவு செய்து அதன் மூலம் தனது கவிதைகளுக்கு தாங்களே மதிப்பெண் இட்டு அதனை சிறந்த படைப்பாக நிறுத்தி கொள்ள முயல்கிறார்கள் இதுதான் தவறு.. சிலர் புரிந்துகொண்ட அந்த பழக்கத்தை மாற்றுவார்கள் சிலர் மாற்றிக்கொள்ள மாட்டார்கள் இவ்வாறு ஆவதால் நல்ல கவிதைகள் கூட காண முடியாமல் போய்விடும்..

இதை ஒரு முறை நான் வெளிப்படையாக கூறியநேரம் சிலருக்கு கோபம்தான் வருகிறதே ஒழிய அது தன் தவறல்ல என்பதை புரியவைக்க தெரியவில்லை . பிறர் குற்றத்தை குறையின்றி கூறும் நம்மால் நாம் செய்யும் குற்றத்தை பிறர் சுட்டி காட்டுவது பொறுக்கமுடியாமல் போய்விடுகிறது நண்பரே .

அதுமட்டுமல்லாது இங்கு கவிதையில் குற்றம் கண்டால் அதை பிறர்மனம் நோகாது எடுத்துரைக்கும் பழக்கம் கூட பலருக்கு இருப்பதில்லை . ஏதோ தாம் தான் கவிமகளின் மைந்தன் என்று நினைத்து பேசுகிறார்கள் . நான் அன்று கண்ட எழுத்துலம் அல்ல இது இன்று மிக மாறிவிட்டது மாற்றிவிட்டார்கள் சிலர் ....
திரு விநாயகர் முருகன் ,புதுவை காயத்ரி அவர்கள் கூறியதுபோல ஒரு கவிஞனின் வளர்ச்சிக்கு கருத்துக்களும் மதிப்நேகளும் முக்கிய பங்கு வகுக்கின்றன என்பது உண்மை.. அதுபோல அவர்கள் படைப்பில் பிழை கண்டால் தவறாது சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள உதவும் நல்ல கருத்துக்களும் மிக அவசியம் அதனை நல்ல முறையில் எடுத்துரைப்பது அதைவிட அவசியம் ..

நட்புடன்
தனிக்காட்டுராஜா,,,,

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் • 15-May-2012 12:58 pm
ஈஸ்வருக்கு வணக்கம். நாம் கருத்து சொல்லி பிறருக்கு கோபம் வந்தால் அதற்கு நாம் பொறுப்பாளி ஆக முடியாது. உங்களால், உங்கள் எழுத்தால் சமுதாயத்திற்கு நன்மை எனும்பொழுது தொடர்ந்து எழுதுங்கள் - நன்றி - மு.ராமசந்திரன்.

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
கவின் சாரலன் • 15-May-2012 6:13 pm
கவிப்பிரிய மு.ரா ஈஸ்வர் அபி
பிரேம்குமாருக்கு நான் அளித்திருக்கும்
பதிலைப் படித்து எழுத்து வளமுடன்
வாழ வழி சொல்லவும்
----அன்புடன், கவின் சாரலன்

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
கவின் சாரலன் •
ஈஸ்வர் you are great வெகுண்டுரை
வேண்டியதை அமைதிப் பண்புடன்
சொல்லும் மனப் பக்குவத்தை பண்பாட்டினைப் பாராட்டுகிறேன்
"ஏதோ தாம் தான் கவிமகளின் மைந்தன் என்று நினைத்து பேசுகிறார்கள் . நான் அன்று கண்ட எழுத்துலகம் அல்ல இது இன்று மிக மாறிவிட்டது மாற்றிவிட்டார்கள் சிலர் .... "
இதை மாற்றுவது எப்படி ஈஸ்வர் ?
“பயன் கருதா பணிகளைச் செய்பவனின் பாதங்களை நோக்கி பாராட்டுக்களே பாதையமைக்கும்.”
என்ற தமிழ் அன்பனின் கவிதை வரிகளில் புதுவை காயத்திரியும்
பொள்ளாச்சி அபியும் சொல்வது போல்
அமைதி கொள்வோமா ?
" ஒரு படைப்புக்கு மதிப்பெண் மற்றவர்கள் தரவேண்டும் அனால் சிலர் இரண்டு மூன்று பக்கங்களை பதிவு செய்து அதன் மூலம் தனது கவிதைகளுக்கு தாங்களே மதிப்பெண் இட்டு அதனை சிறந்த படைப்பாக நிறுத்தி கொள்ள முயல்கிறார்கள் இதுதான் தவறு.. "
இது தேர்தலில் கள்ள ஓட்டு ரிக்கிங்
கிரிக்கெட்டில் மேட்ச் பிக்சிங் மாதிரி
கவித்தளத்தில் சொடுக்கிங் பொதிகை
வெற்பினை வேதனையுறச் செய்யும்
இமாலயத் தவறு யார் மாற்றுவது ?
யோசிக்கவும்
---அன்புடன்,கவின் சாரலன்

எழுதியவர் : (18-Mar-19, 8:20 pm)
பார்வை : 30

மேலே