மீண்டும் ஒரு காதல் சின்னம்

பொய்த்து விட்ட வானம்
கிரமத்து சாபம்
என் கைபிடித்த பாவம்
வயிறுகாய்ந்த சோகம்
போதும் துயரம் என
நகர்ந்தோம்
கெட்டும் பட்டணம் போ
என்பதற்கு இணங்க
வரவேற்காத பட்டணம்
வரவுவைத்தது எங்களை
கோவலனுக்கு உதவிய
கண்ணகியாய்
என்னவள் உடன்நின்றாள்
உழைப்பு தொடங்க
நாட்கள் சகஜமாக இருப்பு
நேரானது
என்னவள் என் சாரதியாக
வாள்வீசி நகரமுடிந்தது
நாங்கள் இருவர் எங்களுக்கு
இருவர் என்றாக
குறையின்றி எங்கள் குடும்பம்
குதுகலமாக
பொருமையாக இருந்த காலம்
போதும்என்றது
செல்லரிக்கும் நோயை
என்னவளுக்கு
கடவுச்சீட்டாய் தந்தபோதே
எனக்கது புரிந்தது
என்னோடு ஊர் உறவை
விட்டு வந்தவள்
என்னைவிட்டு தனியாக
கடைசிப் பயணம்
செல்லரித்து போனவளிடம் சொல்லிவிட்டேன்
செல்லரித்து போகா வண்ணம்
கல்லெடுத்து
வடித்திடுவேன் உன்னை
காலம் கழிப்பேன்
உன்னோடு காலன் எனக்கு
கடவுசீட்டு கொடுக்கும்வரை
என்று
நான் நினைத்தது முடிந்தது
இன்று
இனி காலத்தை செல்லரிக்கும்
என் கண்ணான காதலியை
செல்லரிக்குமோ?
(மனைவியை சிலையாய் வடித்து
தினமும் இரண்டுமணி நேரம் காதல் மனைவியுடன் செலவிடும் உண்மையான காதல் கணவன் படித்தது)