காதல்

காய்ந்த மண்ணில் வீழ்ந்தன வந்து
முத்து முத்தாய் மழைத்துளிகள் மண்ணை
நனைக்க, உழவன் மனதை நெகிழவைக்க ,
என்னருமைக் காதலியே இன்று நீ
என்னை இறுக அணைத்தாய், உந்தன்
பூங்கரங்களால், உன் விழிகளின் ஓரத்திலிருந்து
என் மார்பில் வந்து வீழ்ந்தன கண்ணீர்த்துளிகள்
அத்தனையும் என்மீது நீ கொண்ட காதல்
கண்ணீர்த்துளிகள் என் மனதை இன்பத்தில்
ஆழ்த்திய இன்பத்துளிகள் தனிமையில் வறண்ட
என் மனதிற்கு காதல் மழைத்துளிகள் , மேகமாய்
வந்து நீ தந்தாய் என்னை வாழவைக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Mar-19, 8:13 am)
Tanglish : kaadhal
பார்வை : 275

மேலே