ஜம்மு காஷ்மீர் - 2

பல்வேறு கலச்சாரங்கள், மதங்கள் கொள்கைகள் என்ற நிலை மட்டும் அல்லாமல் பல்வேறு விதமான தட்வெட்ப நிலை, நில அமைப்புக்கள் ஆகியவற்றை கொண்டு மலைப்பிரதேசமாக விளங்கும் இம் மாநிலத்தில் அப்படி என்னதான் பிரச்சனைகள் உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 22 மாவடடங்கள் உள்ளது. அவற்றில் முறையே காஷ்மீர் பிரதேசத்தில் 10 மாவட்டங்களும், ஜம்மு பிரதேசத்தில் – 10 மாவட்டங்களும் மற்றும் லடாக் பகுதியில் – 2 மாவட்ங்களும் அமைந்துள்ளது. இந்திய மாநிலங்களிலேயே தனித்துவமான கொடி கொண்ட மாநிலம் ஆகும்.

இதன் வரலாற்றை திருப்பி பார்த்தோமானால் ஜம்மு காஷ்மீர் என்ற பிரதேசம் மொகலாய மன்னர் அக்பரால் 1586 ஆம் ஆண்டு துருக்கிய மன்னர் யூசுப் கானிடம் இருந்த வென்றதாக வரலாறுகள் கூறுகின்றன.

1586 ஆம் ஆண்டிற்கு பின்பு முதலாம் இராமச் சந்திராவை இப்பகுதியை ஆளுவதற்காக தன்னுடைய பிரதிநிதியாக அக்பர் நியமித்தார், முதலாம் இராமச் சந்திரா அவர்களே இப்பகுதியில் குடிகொண்டுள்ள இந்து கடவுளான ஜம்முதா மாதாவின் பெயரில் ஜம்மு நகரை நிர்மாணித்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

முதலாம் இராமச் சந்திராவின் வழித் தோன்றல்கள் 1780 ஆம் ஆண்டு வரை இப்பகுதியை தங்கள் வசம் வைத்து ஆண்டு வந்துள்ளனர் அதன் பின்னர் இப்பகுதி 1947 ஆம் ஆண்டு வரை சீக்கியர்களால் ஆளப்பட்டு வந்துள்ளதும் வரலாற்று பதிவுகளாகும்.

1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைவதற்கு விருப்பம் தெரிவிக்காத காரணத்தினால் காஷ்மீர் தனிநாடகவே செயல்பட்டு வந்தது,

இந்நிலையில் காஷ்மீர் பகுதியில் வாழ்ந்த வந்த மக்கள் தொகையில் 77% பேர் இஸ்லாமியர்கள் ஆவர். ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் பழங்குடியினர்கள், பாகிஸ்தான் இராணுவ உதவியுடன் அக்டோபர் 20 ம் நாள் 1947 ஆம் ஆண்டு காஷ்மீரை தங்கள் வசமாக்க போர்தொடுத்தனர். அக்டோபர் 27 ம் நாள் வரை அப்போதைய காஷ்மீர் அரசர் ஹரி சிங் பாகிஸ்தான் பழங்குடியினரை எதிர்த்து போராடி பார்த்தார் அதற்குமேலும் தாக்குபிடிக்க முடியாத காரணத்தினால் அப்போதைய இந்திய கவர்னர் மௌண்ட் பேட்டன் பிரபுவின் ஆதரவை நாடவேண்டியதாயிற்று. இந்நிலையில் இந்தியாவுடன் இணையாத ஒரு பகுதிக்கு இந்திய இரணுவத்தால் உதவி புரிய இயலாது என்று கவர்னர் தெரிவிக்க, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை இந்தியாவுடன் இணைப்பதற்கு காஷ்மீர் அரசர் ஹரி சிங் ஒப்புக்கொண்டார். இதுதான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முதல் ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தத்திலும் பாகிஸ்தானால் ஏற்கனவே ஆக்கரமிக்கப்பட்ட பகுதிகளை திரும்ப பெறுவதற்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் போய் விட்டது ஆனால் புதிதாக எந்த பகுதியையும் ஆக்கரமிப்பு செய்வதிலிருந்து தடைசெய்ய இந்த ஒப்பந்தம் உதவி புரியும். இது தொடர்பான வாக்கெடுப்பு ஐநா சபையில் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட போதும் பாகிஸ்தான் அரசின் பிடிவாதத்தால் இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு இந்தியாவுடன் இணைந்த காஷ்மீர் மாநிலம் தனித்துவம் பெற்றே இன்றுவரை செயல்பட்டு வருகின்றது.

இந்திய அரசால் மேற்கொள்ளப்படும் எந்த சட்டங்களும் கட்டுப்படுத்தாது அவற்றிலிருந்து விதி விலக்காக இராணுவம், வெளியுறவு விவகாரம், தகவல் தொடர்பு ஆகிய சட்டங்கள் மட்டுமே காஷ்மீர் மாநிலத்தில் செயல்படுத்தப்படும். இந்த சுயாட்சி பிரிவானது இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 370 ன் படி வழங்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்தியாவில் உள்ள பிற சட்டங்கள் இம் மாநிலத்தில் செயல்படுத்த முடியாவிட்டால் அங்கு எப்படி ஆட்சி நடத்தப்படும்….?

தொடர்ந்து வளரும் -2

எழுதியவர் : சா.மனுவேந்தன் (21-Mar-19, 10:24 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 51

சிறந்த கட்டுரைகள்

மேலே