ஜம்மு காஷ்மீர் - 3

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நில அமைப்புக்களால் மட்டுமல்ல சட்டங்கள் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தனித்துதான் நிற்கின்றது. இம் மாநிலம் இரண்டு நாடுகளுடன் தன்னுடைய எல்லையினை பகிர்ந்து கொண்டு இருப்பதன் காரணமாகவும் பல அச்சுறுத்தல்களை தினமும் எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

எவ்வாறான பிரச்சனைகள் இங்கு வாழும் மக்களை அச்சுறுத்திக் கொண்டுள்ளது என்பதனை நாம் உற்று நோக்கினால் ஒரளவிற்கு விளங்கிக் கொள்ள முடியும். நாம் தினசரி செய்திதாள்களில் பார்ப்பது போல் தீவிரவாத அச்சுறுத்தல் மட்டுமே பூதகரமாக வெளிக் கொணரப்படும் போது பல அச்சுறுத்தல்கள், கொலைகள் மண்ணில் புதைக்கப்படுகின்றது. பல மனிதமற்ற செயல்களும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது.

இந்தியாவில் பிறந்த அனைவரும், அல்லது வாழ்வதற்காக குடியுரிமை பெற்றவர்களும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் அசையா சொத்துக்கள் வாங்க இயலும், ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தை சார்ந்தவர்கள் அசையும் அல்லது அசையா சொத்துக்களை வாங்க இயலாது. பிற மாநிலத்தவரை திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் திருமணத்திற்கு பின்பு இம்மாநிலத்தில் சொத்துக்கள் ஏதும் வாங்க இயலாது. அப்படி என்றால் அவர்களின் திருமணத்திற்கு முன்பு வாங்கிய சொத்துக்கள் அவர்களால் சொந்தம் கொண்டாட முடியா சொத்துக்களாக மாறிவிடும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சட்ட சபையானது ஈரவையாகவோ அல்லது ஓரவையாகவோ செயல்பட்டுக் கொண்டுள்ளது. இம் மாநிலத்தில் ஈரவை கொண்ட சட்ட சபை செயல்படுகின்றது. இச் சட்ட மன்றத்தின் ஆயுட் காலம் ஆறு ஆண்டுகள். நமது நாட்டில் பிற மாநிலத்தின் சட்ட சபைகளின் ஆயுட் காலம் ஐந்தாண்டுகள் ஆனால் இம்மாநிலத்தில் ஆறாண்டுகள் இதுவே இம்மாநிலத்தின் தனித்துவத்தையும், தனி ஆளுமையையும் பற்றி பேசுவதற்கோ அல்லது எழுதுவதற்கோ ஒரு துாண்டுகோலாக அமையும்.

அழகு கொஞ்சி விளையாடும் இப்பகுதியில் அழகான ஆபத்துக்களாக மூன்று போர்கள் இதுவரை நடந்துள்ளது. அப்போர்களின் விளைவாக இந்நிலம் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகியும் உள்ளது. மூன்று போர்களா என்ற நீங்கள் கேட்பது புரிகின்றது. நமக்கு தெரிந்த கார்கில் போர் மட்டும்தானே என்று. 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காளதேச சுதந்திர போர், இந்திய பாகிஸ்தான் போர் ஆகியவையும் இதனுள் அடங்கும்.

தற்போதைய காஷ்மீர் பகுதியானது முந்தைய காஷ்மீர் பகுதியை விட சுருங்கிய பகுதியாகவே உள்ளது. முந்தைய காஷ்மீர் பகுதியின் 60% சதவீத பகுதியினை தற்போது இந்தியாவும், 20% சதவீத பகுதியினை பாகிஸ்தானும் மற்றும் 10% சதவீத பகுதியினை சீனாவும் நிர்வகித்து வருகின்றன.

1950 களின் துவக்கத்தில் சீனா காஷ்மீரத்தின் வடக்கு பகுதியான லடாக்கில் தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கி 1956 – 1957 க்குள் அக்சய் சின் பகுதியில், சிஞ்சியாங் மற்றும் மேற்கு திபெத் ஆகியவற்றை இணைக்கும் இராணுவ சாலைவழிப் போக்குவரத்தை இந்திய அரசிற்கு தெரியப்படுத்தாமலே மேற்கொண்டது. இதன் தொடர்பாக உடன்பாடு ஏதும் எட்டப்படாத சூழலில் 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சீனா யுத்தம் துவங்கியது. 1962 ஆம் ஆண்டிற்கு பின் அக்சய் சின் பகுதி முழுவதும் சீனாவின் கட்டுப்பட்டில் இருந்து வருவதும் நாம் அறிந்த ஒன்றே…. பல அச்சுறுத்தல்களுடன் அப்பகுதி மக்கள் வாழ்க்கைக்கு என்ன செய்வார்கள்…..

தொடர்ந்து வளரும் – 3

எழுதியவர் : சா.மனுவேந்தன் (21-Mar-19, 10:26 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 78

மேலே