ஜம்மு காஷ்மீர் - 1

அந்த பேருந்து மெதுவாக ஓட்டமெடுத்துக் கொண்டிருந்தது. எனக்கு ஜன்னலோர இருக்கை எப்போதும் பிடித்தது, பல விதமான காட்சிகள், பல பாடங்கள் கிடைக்கும். மனதிற்குள்ளும் ஒரு வித சந்தோஷம் மெதுவாக வேர்விட ஆரம்பிக்கும் அதனாலேயே ஜன்னல் இருக்கை எனது முதல் தேர்வு அது எந்த பயணம் ஆனாலும்.

இன்றைய பயணத்தில் மனம் எதிலும் இலயிக்க மறுத்துக் கொண்டிருந்தது, பாதி பேருந்து பயணம் பாடல்கள் கேட்பதிலேயே கழிந்துவிட்டது. இன்னும் சிறிது நேரப்பயணம் மட்டுமே. மனதின் போரட்டத்தால் சிறிது நேரம் பேருந்தில் நடக்கின்ற உரையாடல்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தேன், அனைத்துமே ஏதோ ஒருவரைபற்றியே இருந்தது அதனால் மீண்டும் கண்களை மூடினேன்.

"அவனுங்க என்ன நாட்டுக்காகவா... உழைக்கிறானுக, அவன் அவன் சம்பளம் கிடைக்குமான்னுதானே வேலைக்கு போரானுங்க அப்புறம் எதுக்கு இவனுகளுக்கு பெரிய தியாகி பட்டம் கட்டவேணும்" இந்த வார்த்தைகள் என் கண்களை திறக்கச் செய்தது, யார் இவ்வாறு பேசியது என்று பார்க்க ஆரம்பித்தேன்... அடடா எனக்கு முன்னால் அமர்ந்திருந்த பெரியவர்தான் தனது கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்... எனக்கு சிறிது நேரம் ஏதும் புரியவில்லை, அதனால் அவருடைய உரையாடலை பின்தொடர்ந்தேன்... "இராணுவ வீரர்களை" பற்றியும் அவர்கள் தேசத்திற்கு உண்மையாக உழைக்கவில்லை எனவும் அவருடைய உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவருடைய உரையாடலின் மையகருத்து "ஜம்மு காஷ்மீர்" பற்றியும், அங்குள்ளோர் செய்யும் செயல்கள் யாவும் நாட்டின் மீது கொண்ட வெறுப்பினாலே என்ற தொனியில் அமைந்திருந்தது.
இக் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்றபோதும் அதனை முழுவதுமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்ற என்னுடைய தேடலை துவங்கினேன், விரும்பினால் வாருங்கள் நாமும் "காஷ்மீர்" பற்றி தெரிந்துகொள்ள முயலுவோமே...

இந்தியாவின் வட  பிரதேசத்தில் இந்திய வரைபடத்திற்கு தலையாக அமைந்துள்ளது இந்த ஜம்மு காஷ்மீர். இப்பிரதேசத்திற்கு இந்தியாவின் பெண்கடவுளான ஜம்முதா வின் பெயரே பின்னாளில் ஜம்முவாக மாறிவிட்டதாகவும் ஒரு கூற்று உண்டு.

அனைத்து மாநிலங்களும் ஒரு தலைநகரை கொண்டு செயல்பட்டு வர இந்த மாநிலம் இரண்டு தலைநகரங்களுடன் செயல்பட்டு வருவதும் ஒரு சிறப்புதான். எங்கும் பனி படர்ந்து அழகான ஓவியமாக காணப்படும் ஜம்மு காஷ்மீர் மூன்று பிரிவுகளாக பிரிந்துள்ளது உற்று நோக்கினால் தெரியவரும். இந்த மாநிலம் பல சுற்றுலா பயணிகளை கவர்திலுப்பதிலும், பல புரதான மத அடயாளங்களையும் உள்ளடக்கியுள்ள ஒரு மாநிலம் ஆகும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று வகையான நில அமைப்புக்கள் மூலம் ஜம்மு என்ற பகுதியில் இந்துக்கள் நிறைந்த பகுதியாவும், புகழ் பெற்ற கோவில்களை உள்ளடக்கிய பகுதியாகவும் விளங்குகின்றது. காஷ்மீர் அதிக அளவு இஸ்லாம் மதத்தினர் வசிக்கும் பகுதியாகும். இங்கும் பல இஸ்லாம் மத சின்னங்கள் நிறைய உண்டு. மூன்றாவது பகுதி லடாக் என்ற பகுதியாகும். லடாக் பகுதியில் பௌத்த மதத்தினர் அதிகமாக வசிக்கின்றனர், புகழ் பெற்ற பல பௌத்த தளங்கள் இப்பகுதியில் உண்டு. இப்பகுதியில் சீன நாட்டின் ஆக்கிரமிப்பு பகுதியும் உள்ளது
இதனை குட்டி திபெத் என்றும் அழைப்பா்.

தொடர்ந்து வளரும் - 1

எழுதியவர் : சா.மனுவேந்தன் (21-Mar-19, 10:22 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 72

மேலே