பள்ளுபாட வருவாயே கையோடு கைசேர்த்து
பள்ளுபாட வருவாயே கையோடு கைசேர்த்து
***************************************************************************
கள்வடியும் பூக்கள் காற்றோடு சேர்ந்தாட
துள்ளிவிழும் கயலினங்கள் ஆற்றினில் மகிழ்ந்தாட
குள்ளநிலை வாத்துக்கள் தண் நீரில் பயணிக்க
தெள்ளுதமிழ்ப் பாடல்கள் சேயரினம் பாடிவர
அள்ளிவிடும் அழகினிலே என்கனவில் வந்தவளே
பொல்லாத உன்நினைவு என்மனச வாட்டுதடி
பள்ளுபாட வருவாயே கையோடு கைசேர்த்து !