வெண்ணிலா

அழகோவியமாய்... காதல் காவியமாய்...
நினைவிலே நிற்கிறாய்...நெஞ்சிலே நெருடுகிறாய்...

அழகியே!
உன்னைத் தொட்டவர் நீல் ஆம்ஸ்ட்ராங்காம்...
உன்னை வருடும் மேகம் வழக்காடாதோ?

நில்லாமல் ஓடும் நிலவே
ஒரு நிமிடம் தடுமாறி நின்றது ஏனோ?
உன் பிம்பம் பூமியில் பார்த்தாயோ?

உன் அன்னை உன்னைத் தொலைத்தாளோ?
உறங்காமல் தவித்தே தனியே திரிகிறாய்...

ஏணிப் போட்டு
உன்னை எட்டிப் பிடிக்க முடிந்தால்
நித்தம் உன்னை கட்டி முத்தமிடுவேன்...

சொர்க்கம் என்பது யாதெனில்
தென்னங் கீற்று தென்றலும்
உன் பொலிவும்...
என் வீட்டில் விருந்தினராய் வருவதே....

என் தனிமை இரவுக்கு தாகம் தீர்க்க
இரவெல்லாம் நீ என் துனை ஆனாயோ?

உனக்கு மட்டும் சிறகு இருந்தால்
பறவைகள் இனமே
நானி தம் இனம் அழிக்கும்...

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் -
நிலா சோறு ஊட்டி...
கொஞ்சும் நிலவே கொஞ்சம் ஒளிந்துக் கொள்
ஏமாற்றுவார் ஏமாந்துப் போவார்...

கருணைக் காட்டி ஒரு வாய்ப்பு கொடு
காற்றாய் வந்து -
காதோரம் என் காதல் சொல்வேன்...

கோடி விண்மீன்கள்
கைக்கோர்த்து நின்றாலும்...
தனியே நின்றே கைத்தட்டல் பெறுவாய்...

கவிஞனுக்கு பிடித்த நீ
கவிதைக்கு பிடித்த நீ
கதிரவனைக் கண்டதும்
வெட்கத்தில் ஏன் ஓடி மறைகிறாய்?

இயற்கை அதிசயங்கள் ஏழு நூறு இருந்தாலும்
முதல் அதிசயமாய் நீயே உலா வருவாய்!

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (25-Mar-19, 9:47 am)
சேர்த்தது : மதனகோபால்
Tanglish : vennila
பார்வை : 4252

மேலே