நிறம் தொலைத்த நிழல்கள்
வசந்தங்கள் நுகர
வாய்புக்கள் தகர்ந்தன
நாட்கள் நடைபயில
நாடகங்கள் அரங்கேறின
மகிழ மரமென
மகிழ்ந்து பூத்திருந்தேன்
தேவதை அவள்
தேர்வாக நானிருந்தேன்
கனவுகள் கண்டு
காதல் கொண்டேன்
நினைவுகள் தொலைத்தேன்
நிஜங்கள் தவிர்த்தேன்
முகில் சூள்கொள்ள
முகாந்திரங்கள் தொலைத்தேன்
கரம் பிடிக்க
காதல் தொலைத்தேன்
வானம் பொய்த்த
வறண்ட நிலமானேன்
நிறம் தொலைத்த
நிழலில் நித்திரையானேன்
பூவையவள் பூச்சூட
பூக்கும் தருவானேனோ
நிழல் விழுங்கும்
நியாயத்தில் நிர்கதியானேனோ
இதயத்தில் பூத்தேன்
ஈரத்தில் உலர்ந்தேனே
மாலையில் மருண்டேன்
மணவறையில் நழுவவிட்டேனே