வரமொன்று வாங்கி வந்தேன்
வரமொன்று வாங்கி வந்தேன்
நீ வருவதற்கு
உன்னால்தான் உயர்வடைய
கண்டேன் பக்கபலம்
பார்வையிலே மயங்கவில்லை
பாசத்திலே மெய்மறந்தேன்
அன்புக்கோர் அடைக்கலம் நீ
ஆயிரத்தில் ஓர் பிறவி
வரமொன்று வாங்கி வந்தேன்
நீ வருவதற்கு
பட்டுப்போல் மேனியும்
பவளம்போல் கண்களும்
கண்டு நான் மயங்கவில்லை
உன் உள்ளமதில் தூய்மை கண்டேன்
அதில் உறங்க என் உள்ளம் தந்தேன்
காதலிலும் புதுமை உண்டு ,பசுமை உண்டு
பத்தரை மாற்றுத் தங்கமென
மங்கையுந்தன் மனம் அழகு.
வரமொன்று வாங்கி வந்தேன்
நீ வருவதற்கு
அழகென்றால் நீ அழகு
என் இதயத்தில் நீ அழகு
சொர்க்கத்தில் வாழுகின்ற
சுகம் கண்டேன் உன்னால்
சொந்தமென சொந்தமென வருவதற்கு
வரமொன்று வாங்கி வந்தேன்
நீ வருவதற்கு

