காதல்

நதிக்கும் கடலுக்கும் காதல்
நதி கடலோடு கூடி தன்னையே
கடல் நீரில் கரைத்துக்கொள்ள
கடலோ அலையலையாய் ஆர்ப்பரித்து
கரைமணலைத் தேடி ஓடி தழுவுகின்றதே
பாவம் நதிதான் என்ன செய்யும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (27-Mar-19, 5:52 am)
Tanglish : kaadhal
பார்வை : 194

மேலே