அந்த இரு நாட்கள்
அந்த இரு நாட்கள்
ஒரு சோடிக் கண்ணுக்குள்
ஒடுங்கித்தான் போனதோ
ஒன்றரைக் கோடியரின் பார்வை
பினணக் கைதியாகிப் போனவன் விடுதலை செய்கின்றான்
ஓர் வரையறைக்குள் வட்டமிட்ட மானுடச்சிறகை
அவ்விரு நாட்களும் நகர்த்த மறுக்கின்றன
தன் மணித் துளிகளையும்
மடி கட்டிக் கொண்ட யுகங்களினால்
ஓர் தாயின் பிள்ளை அவனென
தானாட மறந்தாலும் தன் தசையாடி நின்றனர்
மண்ணின் மைந்தர்கள்
மொழியால் கிழிந்த பிரதேசங்களை
ஒன்றினைத்துத் தைத்துக் கொண்டிருந்தது
அவன் தியாக ஊசி
அகிலத்தின் இதயத்தில் அறைந்திட்ட ஆணியதில்
நிழற்படமாய் அவன் உருவம்
புண்ணியனின் வீரத்தை
அந்நியனும் செப்புகின்றான்…
அபினந்தா வாழ்கவென்று…
சு.உமாதேவி