இயற்கையின் சின்னச் சின்ன

நீலவான நெடிய வீதியில்
நடந்து சோர்ந்த நிலவு
முகில் மடியில் சற்று ஓய்வு கொண்டது !

கோடை வெம்மை தாங்காது
குழாயடி குழி நீரில்
நீராடியது சிட்டுக்குருவி !

வண்ணப் பூக்கள் பூத்திருந்த
வசந்தத் தோட்டத்தில்
ராகம் பாடியது கீதக்குயில் !

பச்சைப் புல்வெளியில்
குனிந்து குனிந்து இரைதேடி
துள்ளிக் குதித்தது குள்ளமுயல் !

சலசலத்து ஓடும் நீரோடையில்
சாயந்திர நிலவு வளைந்து நெளிந்து
பயணம் செய்தது !

மலர் உதிர்ந்து இலை உதிர்ந்து
கிளைக் கொம்பு ஏந்தி
பாதையோரத்தில் ஒரு தனிமரம் சோகத்தில் !

கொக்கொன்று ஒற்றைக் காலில்
குளக்கரையில்
மனிதன் ஒருவன் தூண்டிலுடன்
மீனுக்காக காத்திருக்கின்றனர் !

வயல் வெளிகளுக்கிடையில் நீரோடை
சலனத்த்தில் ஓர் சங்கீதம்
வரப்பினில் நடந்தால் ரசிக்கலாம் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Mar-19, 9:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே