உன் வாழ்விற்காக
விடையற்ற விடுகதைகளாய்
ஏனோ இன்னும் நீளும் வாழ்க்கை
கதிரவன் வரவை காண
மேற்கே செல்லும் மேகமாய்
நீளும் துன்பங்கள்
கரையோடு கரைந்தாடும்
அலையின் ஈரமாய்
காலத்திற்கும் நிலைத்திருக்கும்
இன்பம்
நெருப்பில் நீராடினால்தான்
தங்கமும் தன் மதிப்பை
காண முடியும்
வலிகள் இல்லா
வழிகள் இவ்வுலகில் இல்லை
வஞ்சனையும் பொறாமையும்
உன் பாத
பஞ்சனையாய் மாறும்
தோல்வி தோள்தட்டும்போது
தோள் சாய தோழனாய்
தன்னம்பிக்கை உண்டு
என்றோ கிடைக்கும் வெற்றிக்காக
என்றும் போராடும் மனிதர்கள்தான்
இங்கே
உளியுடன் உறைந்து கொள்
ஒன்றிணைந்துகொள்
வலியறியாமல்
உன் வலியறியாமல்
நினைத்திருந்தால்
கடந்த காலம் இல்லை
நிதானமின்றி இருந்தால்
நிகழ் காலம் இல்லை
எதிர் நீச்சல் போடாதிருந்தால்
எதிர் காலம் இல்லை
மூன்றடி மாளிகைக்கு
முதலடி இதுதான்
தோல்வியை படியாக்கு
அதன்மேல் வெற்றியெனும்
கொடி நாட்டு
ஆற்றில் கரைந்து விடும்
உப்பாகி விடாதே
அதனுள் சென்று
ஆழம் காணும்
கல்லாகி விடு
சேற்றில் மலரும்
செந்தாமரையாய் இரு
உன் பாதம் அடியில்
சிகரத்தை மிதக்க விடு
எழுந்துகொள்
எதிர்த்து நில்
உன் முன் தெரியும்
உன் வாழ்விற்காக......