சிறுகதை

ஒரு ஊரில் தேவாலயம் ஒன்றில் பக்தி மிக்க மக்கள்
கூட்டம் கூட்டமாய் வந்து ஆண்டவனை தரிசித்து செல்வர்
ஒருநாள் அக்கோவிலில் குருவானவரது பிரசங்கம் கேட்பதற்கு
ஆவலுடன் மக்கள் காத்திருந்தனர்.
அன்று அந்த குருவானவர் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து விட்டார்
பிரசங்கம் தொடங்கியது தொடங்கிய நேரத்தில் இருந்து ஒரே நரகம் எப்படி என்பதை விளக்கி விரிவாக கூறிக் கொண்டே இருந்தார்
மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை இது என்ன இப்படி பேச்சு வேறு பக்கம் போகின்றது
என்று முணுமுணுத்துக் கொண்டு மக்கள் வெறுப்புடன் எழுந்து செல்ல முயலுகையில்
அந்த நேரம் உண்மையான குருவானவரின் வருகையை ஒலிபெருக்கியில் கேட்டனர் அப்போ இந்த குருவானவர் எங்கேயோ மறைந்து விட்டார் , அப்போதுதான் மக்களுக்கு இது சாத்தானின் வேலை என்று புரிந்தது. அதுதான் அது வந்த நேரத்தில் இருந்து நரகத்தை பற்றியே பேச்சு கொடுத்தது கடவுளையே சோதித்த சாத்தானுக்கு மனிதனை சோதிப்பது எம்மாத்திரம் , என்று மக்கள் தங்களை தாங்களே சமாதானம் படுத்தி கொண்டு தூய பிரசங்கத்தை குருவின் மூலமாய் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர் .

எழுதியவர் : பாத்திமாமலர் (27-Mar-19, 10:57 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : sirukathai
பார்வை : 710

மேலே