தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை

மக்களே ஒரு ஓட்டிற்கு
ஆயிரம் ரூபாய்
கொடுப்போம்
அதை ஐந்து
ஆண்டுகளில்
வட்டியும் முதலுமாய்
எடுப்போம்

ஏழைகள் வீடுகட்ட
நிதி ஒதுக்குவோம்
எங்கள் வீடு கட்டவும்
நிதி ஒதுக்குவோம்

காவேரி பிரச்சனை
என்றால் பதுங்குவோம்
ஏழை மகள்
கவேரிக்குப் பிரச்சனை
என்றால் ஒதுங்குபோம்

நாங்கள்
ஒட்டு கேட்டு
வரும்போது மதிப்போம்
நீங்கள்
உதவி கேட்டு
வரும்போது மிதிப்போம்

இன்று போய்
நாளை வா
இதுவே எங்கள்
தாரக மந்திரம்

எங்களுக்குத்
தேவையோ
அரசு எந்திரம்

வழக்கம் போல்
நதிகளை எல்லாம்
இணைப்போம்

பதவிக்காக
நந்திகளோடு கூட
இணைவோம்

விவசாயிகளை
தள்ளுபடி செய்வோம்
மன்னிக்கவும்
கடன்களை

விலைவாசியை
குறைப்போம்
கொலைவாசியை
மறைப்போம்

தமிழைக் காப்போம்
எங்கள்
பிள்ளைகளை மட்டும்
அங்கிலப் பள்ளியில்
சேர்ப்போம்

கடவுளும் நாங்களும்
ஒன்றுதான்
வென்றவுடன்
எங்கு தேடினாலும்
கிடைக்கமாட்டோம்

மக்களே இதுவரை
எங்களை நம்பி
வாக்களித்தமைக்கு நன்றி

இனியாவது பணம்
பார்த்து வாக்களிக்காமல்
வேட்பாளரின் குணம்
பார்த்து வாக்களியுங்கள்

கவிஞர் புதுவைக் குமார்

எழுதியவர் : புதுவைக் குமார் (27-Mar-19, 9:02 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : therthal arikkai
பார்வை : 79

மேலே