கிளியும் இவளும்

அது கிளி பார்த்தா
இவள் கிளியோபாட்ரா

கிளிக்கும் செவ்வாய்
இவளுக்கும் செவ்வாய்

இவள்
சிவப்பழகின்
காரணம் புதன் கிழமை பிறக்காது செவ்வாயில் பிறந்ததா?
இல்லை
பூமியில் பிறக்காது
செவ்வாயில் பிறந்ததா?
விளங்கவில்லை

சிறகு முளைத்ததும்
கிளி பறக்கும்
சிரலநேரம்
இவளும்
பெற்றோரை விட்டு

ஆல மரத்தில் இருப்பது
ஆளை மயக்கி இழுப்பது

கிளி ஜோசியம் பார்க்கும்
கிளி ஜோசியர் பார்ப்பார்

அது நெல்லோடு இருக்கும்
இவள் செல்லோடு இருப்பாள்

கிளி சீட்டை எடுத்து போடும்
இவள் பக்கத்து வீட்டில் சீட்டு போடுபவள்

அது வானில் பறப்பது
இவள் தரையிலேயே பறப்பவள்

கிளியும் கூண்டில்
இவளும் சமூகம் எனும் கூண்டில்

கிளி பழத்தைக் கொத்தும்
இவள் மனத்தைக் கொத்துபவள்

மனிதனைக் கண்டு பறக்கிறது
மரத்தின் கிளி
இவளை கண்டதும் பிறக்கின்றது
மனத்தின் கிலி

அது சோலையில்
இவள் சேலையில்

கிளியைப் பிடித்து குரங்கிடம்
கொடுப்பர்
இவளை சிலநேரம் மனிதக் குரங்கிடம் கொடுத்துவிடுகின்றனர்

கிளியை துரத்துவது பூனை
பெண் கிளியே எப்படி சமாளிக் கின்றாய் உன்னைத் துரத்தும் ஆணை

சமூகம் ஆகட்டும் சுமூகம்

எழுதியவர் : புதுவைக் குமார் (27-Mar-19, 8:52 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kilium ivalum
பார்வை : 173

மேலே