பஞ்சணை மடி

உனது மனதில் குடியேற
விசா வேண்டி
நான் கோரவா...
உனது நெஞ்சில் நுழைந்துக் கொள்ள
மீனாக நீந்தி செல்லவா...

வண்ண பூவின் இதழ்கள் நெய்து
உனக்கு நானும் சேலை போர்த்தவா
விண்னைத் தாண்டி
விண்மீன்கள் கோர்த்து
உனக்கு நானும் பூ சூடவா...

வானவில்லை வளைத்து சேர்த்து
உனக்கு நானும் மாலை தொடுக்கவா...
எண்ணிலடங்கா ஆசை சொல்லி
உனது மடியில்
உறங்கி கொள்ளவா...

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (31-Mar-19, 11:00 am)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 814

மேலே