காதல் கடிதம்

காதல் கடிதம்🌹

அன்பு காதலியே,

கண்களால் கவர்ந்த என் கனவு
கன்னியே
என் இதய ராணியே
உன் அம்பு பார்வை
என் இதயத்தை ஆழமாக தாக்கியதில்
குருதி விழியாமல்
காதல் ஆறாக ஓடியது
அந்த ஆற்றில் நின் கால்
பதிக்க என் நெஞ்சு துடிக்குது
கார்மேக கூந்தல் அழகியே
கொஞ்சம் மழை தருவாயோ
வரண்ட என் சென்னை வாழ் மக்களுக்கு
சுயநலத்திலும் ஒரு பொதுநலம்
அழகு மயிலே
அற்புத ஓவியமே
உன் கண்ணம் இரண்டும்
தேன் கிண்ணம்
முத்து பல் சிரிப்பு அழகியே
நீ சிரிக்கும் போது விழும்
கண்ண குழி
ஆச்சிரியம் என் சொல்வேன்
காண கிடைக்காத காட்சி
அதற்கு என் கண்களே சாட்சி
மீண்டும் மீண்டும் நான் காண ஏங்கும் மாட்சி
என்னவளே
சின்னவளே
சின்ன இடையாளே
என் ஆசை என்ன தெரியுமா
மிகவும் எளியது
மிகவும் சுலபமானது
நம் இதயம் இடம் மாற வேண்டும்
அவ்வளவே
வஞ்சியே வஞ்சனை
இல்லாமல் காதலை
அள்ளிவிடு என் பக்கம்
சிந்தாமல் சிதறாமல் எடுப்பேன்
இது உறுதி
உன் செவ்விதழை மெல்ல மலரவிட்டு
சொல்லி விடு
அழகாக நம்
காதலை
கன்னியே உனக்காக
காத்திருக்கும்
உன் காதலனாக ஆசைப்படும்
காதலன்.
- பாலு.

எழுதியவர் : பாலு (31-Mar-19, 2:24 pm)
சேர்த்தது : balu
Tanglish : kaadhal kaditham
பார்வை : 245

மேலே