அவளும் மலரும்
பூத்திருக்கும் மலரில் எல்லாம் உந்தன்
புன்னகை வதனம் கண்டேன் அதன்
வாசத்தில் உந்தன் நேசம் உணர்ந்தேன்
விரிந்த மலர் இதழ்களில் உந்தன்
மென்மை உணர்ந்தேன் பெண்ணின் மேன்மை
உந்தன் மூடிய செவ்விதழ்களின் எழிலெல்லாம்
கண்டேனே நான் மலரா மலர் மொட்டுக்களில்
மொட்டுக்கள் விரிய விரிந்தன அழகாய்
மலரின் வண்ண இதழ்கள் அதில்
காணும் தேனிற்கு வண்டுகள் கூட்டம்
விரிமலர் இதழ்கள் போல் உந்தன்
செவ்விதழ்கள் இதழோரம் மதுவேந்தி
வந்து என் வரவிற்கு காத்து நிற்க
மலரும் மங்கையும் ஒரு ஜாதி
ஜாதி மல்லியை நான் கண்டேனே