தீண்டல்

மேகமாய் உதித்தேனடி
மேலாடையின்றி
மேற்கே உதித்த உன்னை
பூந்துவாலையாய் சுற்றிடவே

பூக்களாய் ஜனனித்தேனடி
பூக்கரம் கொண்டு பறித்திடவே
பூமகளே பறித்திடுவாயா...
பூக்கரம் கொண்டு தீண்டிடுவாயா...

பொன்வண்டாய் பறந்திட்டேனடி
பொன்மகளே பிடித்துடுவாயா...
தடாகமாய் தேங்கிநின்றேனடி
தாமரையே குதித்திடுவாயா...

தருவாய் நானின்றேனடி
தாரகையே தங்கிடுவாயா...
தளிராய் மாறிவிட்டேனடி
தென்றலாய் தீண்டிடுவாயா...

உன் தீண்டல்
உன் பிடித்தல்
அம்பிகாவதி அமராவதி காதல் போலவே
அமரத்துவம் எய்திடாதோ...?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (31-Mar-19, 6:46 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 186

மேலே