தமிழைக்காக்க தயக்கம் ஏன்

உன் வீட்டில் ஏதேதோ
வளர்ப்பதாய் சொல்கின்றாய்
நாய், பூனை மற்றும் பாடும் பறவை
உன் வீட்டு துருத்தி மாடத்தில்
ஏதேதோ செடிகள், ஏன் சிறு மரங்களும்
வளர்ப்பதாய்க் கூறி மகிழ்கின்றாய்
பெருமைப்படுகிறாய் இதெல்லாம் சரி
நீ உன் பேரன் பேத்திகளுடன், மனைவி
பிள்ளைகள் மற்றும் வீட்டிற்கு வந்து போகும்
நண்பர்களுடனும் பேசுவது மட்டும்
ஏன் ஆங்கிலத்தில் ?...….உனக்கென்று
உன் தாய் மொழி இல்லையா ? மனத்தைத்
தொட்டு கூறு ….. நீ அறிவாய்
உனக்கென்று ஓர் அழகிய தாய் மொழி
இருந்தும் ….. ஏதோ ஓர் தேவையில்லாத
தாக்கத்தால் உன் தாய் மொழியைப்
புறக்கணித்து ஆங்கிலத்தில் பேசுவதை
குடும்ப சகிதமாய் வளர்த்துக்கொள்கிறாய்

வீட்டில் ஏதேதோ வளர்க்கும் நீ
நீ பேசும் மொழியை வளர்க்காமல்
இருப்பது பேதைமையே அல்லவா
தாய் மொழியை மறப்பது
தாயை மறப்பது போலாகும்
மாற்றிக்கொள் உன் போக்கை
தமிழைப் போற்றிக் காத்து வளர்ப்பது
உன் கடமையடா தமிழா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (31-Mar-19, 7:57 pm)
பார்வை : 381

மேலே