காதலை சொல்லி

அன்பே
என்ன மாயம் இன்று
நீ கண்டாயோ!
புதுவார்த்தை ஒன்று
என்னிடத்தில் வீசுகிறாய்

என்னிடத்தில் என்ன பேச
நீ நினைத்தாயோ
செவிகளில் இன்று
சிலுசிலுப்பு தோன்றுகிறது

உண்மை சொல்ல
ஓடிவந்த இதயம்
மௌனத்தின் பின்னால்
ஓடி ஒளிகிறதே

என்ன நினைத்து
நீ தயங்குகிறாயோ
அதை நினைத்து
நான் தடுமாறுகிறேன்

அரும்பு காதலொன்று
மொட்டாக வருடமொன்றிற்கு காத்திருந்து
அடுத்த வருடத்தின் தொடக்கத்தில்
பூக்கத் தொடங்கியது!!
ஆண்டுகள் ஐந்து முடிந்தும்
காதல் மலராமல் காத்திருந்தது...

காத்திருந்த மலரின்று
இதழை விரித்து -- அதன்
இதயக் கதவை திறக்க!
இத்தனை வருடம்
மூடிவைத்த தேன்துளியின் சாரல்கள்
இனிப்பாய் இனிக்குதே -- அதில்
இந்த இதயம் மூழ்குதே!!

நான் வருவேனென்று
எத்தனை கனவுகளை
கண்ணோரம் வைத்து காத்திருந்தாயோ!
அவையெல்லாம் இன்று
கண்ணீரோடு கலந்து வழிந்தோடுதே
காலமும் முடிந்து கறையேறுதே...

எத்தனை புன்னகையை நீ
பூட்டி வைத்திருந்தாயோ
அவையெல்லாம் இன்று
பூச்செண்டாக புகழ்மணம் வீசுதே

எத்தனை வெட்கங்களை நீ
கட்டி வைத்திருந்தாயோ
அவையெல்லாம் என்னை
கட்டியணைக்க கைமீறுதே

கட்டியணைக்க தைரியம் வந்தும்
ஏன் அன்பே
கண்களில் இந்த பயம்?
கண்ணியம் காத்த நம்காதல்
காமமாகுமென்றா

தேகத்தின் உள்ளே
அடைக்களம் கேட்டிருக்கும்
உள்ளம்தான் -- நம்மை
அன்பிற்கு அடிமையாக்கியது

உள்ளம் இரண்டும்
ஒன்று சேரும்போது -- உலகம் அதை
கூடல் என்று பார்த்தால்!
நாம் அதன்மீது
ஊடல் கொள்வோம்!!
ஊமையாவோம்!!!

காவியம் பல
நம் கண்ணியத்தை புகழ்பாடும்!
நம் காதலே வருங்காலத்தில்
காவியமாக மாறும்!!
உறவில் வளர்ந்த சகியும் நீதான்
உயிரில் கலந்த சங்கமும் நீதான்!!

வருடங்கள் வழிந்தோட
நாம் வாடியதுப்போதும் -- இன்றாவது
காதலை சொல்லி
இனியாவது இணைந்து வாழ்வோம்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (31-Mar-19, 8:52 pm)
Tanglish : kaadhalai solli
பார்வை : 759

மேலே