பூமியின் விழிப்பு

கடலை கலக்கி கல்மலையை உருட்டி
உடலை ஒரு முறை குலுக்கிக் கொண்டால்
ஒரு சில நொடிகளில் ஒப்பற்ற உயிர்கள்
ஓடி ஓய்ந்த நிலையில் மாண்டுவிடும்

அழகாக சுற்றி ஆனந்தம் கொடுக்கும்
அளவான வேகம் அதிகமாய் அதிகரித்தால்
ஆணவம் பேசி அகிலத்தை மிரட்டி
ஆன்மீகம் செய்வோர் கொட்டம் அமைதியாகும்

தர்மத்தைப் பேசி தரமாக வாழும்
தயாள குணத்தோரும் தண்டிக்கப்பட்டு
தரணியின் சிதைவில் தாமக அமிழ்ந்து
தண்டனைப் பெற்றே மாண்டு போவார்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Apr-19, 5:53 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : Boomiyin vilippu
பார்வை : 2578

மேலே