கனவில் உன்னுடன்

கனவில் பிறந்தவளே -
கற்பணையில் மலர்ந்தவளே -
நெஞ்சம் முழுதும்
படர்ந்தாய் தாமரையாய் !!!!!
அலை இல்லா உந்தன் கண்ணில்
மூழ்கிவிட்டேன் நிரந்தரமாய் !!!!!
பேச நினைக்கும் எந்தன் உதட்டில்
கரைந்திடும் இதலால் கட்டி இழுத்தாய் ___
சுமை தாங்கிய எந்தன் இதயம்
சுவை கண்டது உன்னால் !!!
கண்களைத் திறந்தேன்
கனவோ கலைந்தது -
தனிமையில் துடிக்கட்டும் என்று
இதயத்தை மட்டும் விட்டுச் சென்றாய்
இன்றும் துடிக்கிறது வலியினால்
மட்டும் அல்ல ,,-
உன் வருகைக்காகவும்.................

எழுதியவர் : கவிமாணவன் (1-Apr-19, 8:35 pm)
சேர்த்தது : Kavimanavan
Tanglish : kanavil unnudan
பார்வை : 885

மேலே