என் அப்பு ஆச்சி

என் அப்பு ஆச்சி

(பொன் குலேந்திரன் (கனடா)

புலம் பெயர்ந்த இளம் தமிழ் சமுதாயம் தமது பெற்றோரை மம்மி, டடி என்று அழைக்கும் காலம் இது. அவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் வாழும் பல் இனச் சூழல் அது. படிக்கும் கல்லூரியில் சக மாணவர்கள் தங்கள் பெற்றொரை அழைக்கும் முறையைப் பார்த்து அதைப் பின்பற்றுகிறார்கள் . மம்மி என்ற வார்த்தைக்கு எகிப்திய பிரமிட்டில் வேறு அர்த்தம் உண்டு
எமது கிராமப் புர ஊர்களில் நமது முன்னோர்கள் கலாச்சாரத்தோடு பிண்ணிய சில நெறி முறைகளைக் கடைப்பிடித்தனர் . நான் செல்லமாக என் அப்பாவை “அப்பு” என்றும் அம்மாவை “ஆச்சி” என்றும் அழைப்பேன். என் அப்புவுக்கு எண்பது வயதாகியும் நான் அவரை அழைக்கும் விதம், நான் கனடாவுக்குப் பல வருடங்களுக்கு முன் புலம் பெயர்ந்தும் மாறவில்லை.

என் பெற்றோரின் பூர்வீகம் யாழ் குடாநாட்டில் உள்ள சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவு. நான் யாழ் இந்துக் கல்லூரியில் படிக்கும் போது என்னை மாணவர்கள் “தீவான்” என்று அழைப்பதை நான் கணக்கில் எடுத்ததில்லை. காரணம் அவர்கள் வசிப்பது இலங்கைத் தீவில்.
ஒரு காலத்தில் தீவான், மட்டக்களப்பான், வன்னியான், திருகோணமலையான் என்ற பிரதேசவாதம் யாழ் குடாநாட்டில் சாதி வேற்றுமையோடு தலை தூக்கி நின்றது . விடுதலைப் புலிகளின் வருகை அதில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. காரணம் மாவீரர்கள் எல்லாத் தமிழ் ஈழப் பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் .

என் அப்புவைப் பற்றி நான் சொல்லமுன் என் தீவைப் பற்றிச் சொல்வது அவசியம்.
****
அனலைதீவு சப்த தீவுகளில் ஒன்றாகும். பாக்கு நீரிணைக் கடல் ஏழு கடல் என வழங்கப்படுகிறது. ஆதலினால் அக்கடலினால் சூழப்பட்ட தீவுகளும் சப்த தீவுகள் எனப் பெயர் பெற்றன. ஒல்லாந்தர் இத்தீவிற்கும் மற்றத் தீவுகளுக்குப் பெயர் சூட்டியது போன்று தமது நாட்டின் ஞாபகமாக ரொட்டர்டம் (Rotterdam ) எனப் பெயரிட்டு அழைத்தனர். அனலைதீவு, எழுவை தீவுக்கும், நயினாதீவுக்கும் இடையில், நயினாதீவுக்கு அண்மையில் அமைந்துள்ளது. இத் தீவு ஊர்காவற்துறைக்குத் தெற்கேயும் நயினாதீவுக்கு வடக்கேயும் அமைந்துள்ளது. பல நூற்றாண்டு காலமாக அனலை தீவு, நெடுந்தீவு, நயினாதீவு மக்களிடையே குடும்பத் தொடர்புண்டு. ஊர்காவற்றுறைக்கு தென்திசையில், சுமார் 7 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் அனலைதீவு மூன்றரை மைல் நீளமும, ஒன்றரை மைல் அகலமும் கொண்டு வடக்கு தெற்காய் நீண்டு கிடக்கிறது. கடல் குமுறி வரும் காலங்களில் இத் தீவினை அழிவிலிருந்து பாதுகாக்க இயற்கையாகவே கற்பாறைகள் அணை யோன்று அமைந்துள்ளது. அலைகள் ஊருக்குள் புகாமால் இருக்கும் அணையைக் கொண்ட தீவாகையால் அணை + அலை + தீவு = அனலைத் தீவு எனப் பெயர் பெற்றதென விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பொருத்தமான விளக்கமும் கூட. இன்னொரு சாரார் ஒரு புதுமையான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்கள். நயினாதீவுடனும், எழுவைதீவுடனும். அணைந்து இருப்பதினால் இத் தீவிற்கு அப்பெயர் வந்திருக்கலாம் என்பது சிலரின் கருத்து .
நீர்வளமும். வற்றாத நன்னீரும், பற்பல மண்வளமும், பயிர் வளமும் நிறைந்த தீவு இது. அனல் காற்று வீசும் தீவாயிருப்பின் பாலைவனமாகத் தோற்றமளித்திருக்கும்.

நயினார் குளம், ஐயனார் குளம் என்ற பெயர்களுடன் பல நன்னீர் குளங்கள் உண்டு. அக் குளங்களை அனலைதீவு வாசிகள் விவசாயத்துக்கு நீர்பாய்ச்சப் பாவிப்பார்கள். பொன் விளையும் பூமியும் நன்னீரும் இருப்பதினால் அவ்வூர்வாசிகள் வெளிப்பிரதேசங்களை உணவுக்காக நம்பிவாழவில்லை. ஆனால் காலப் போக்கில் ஈழ யுத்தம் காரணமாகக் கல்வி, தொழில். பாதுகாப்பு நிமித்தம் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர். அதில் நானும் ஒருவன் .

****
அனலைதீவுவாசிகள் நீண்ட ஆயுள் உடையவர்கள். இதற்குக் காரணம் அசுத்தப்படாத சுற்றாடலில் வாழ்ந்ததினால் மட்டுமன்றி கடினமான விவசாயம் செய்த உழைப்பினால் ஆரோக்கியமான உடல் நலம் கொண்டவர்கள் அவர்கள்;. கவலையற்ற தன்னம்பிக்கையுள்ள வாழ்க்கையும் ஒரு காரணமாகலாம். அதோடு கூட அங்குள்ள மூலிகை வகைகளும் ஒரு காரணமாகயிருக்கலாம். இத்தீவிற்கு எக்காலத்தில் மக்கள் வந்து குடியேறினார்கள் என்பதை திட்டவட்டமாக கூறமுடியாது. ஆனால் மற்றைய தீவுகளுடன் தொடர்பு இருந்தபடியால் நயினாதீவு, நெடுந்தீவு, புங்குடுதீவு வழியாக மக்கள் வந்து குடியேறியிருக்கலாம் என்பது ஒரு ஊகமாகும். இறுப்பிட்டிக்கும் அனலைதீவுக்கும் இடையே உள்ள கடல் வரண்டு தரையாக காட்சியளித்த காலங்களில் மேய்ச்சலுக்கு தமது கால்நடைகளை அனலைதீவிற்கு அனுப்பி வந்தனர் இறுப்பிட்டி மக்கள். பினனர் அக்கால்நடைகளின் கொம்புகளிலும், கால்களிலும் உள்ள மண்ணின் தரத்தைக் கண்டு வியந்து, மக்கள் ஏழுமலை நாச்சியார் கோயிலடியில் குடியேறியிருக்கலாம். இன்றும் அனலைதீவு மக்களுக்கும் இறுப்பிட்டி மக்களுக்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு.அப்படி தமிழ் நாட்டில் உள்ள இராமநாதபுரத்தில் இருந்து வந்து குடியேறினவர்கள் எனது அப்புவின் மூதாதையர்.

அப்புவின் முன்னோர் ஒரு காலத்தில் இராமனாதபுரத்தில் இருந்து வந்து அனலை தீவில் குடியேறிய இந்து சமயவாதிகள் .
என் அப்புவின் தந்தை சுப்பையா நூற்றி மூன்று வருடங்கள் வரை வாழ்ந்தவர்.
என் அப்புவுக்கு இப்போ வயது எண்பது .இன்னும் பல் விழவில்லை. கூனல் இல்லை. பொல்லு பிடிக்காமல் இளந்தாரி போல் நடப்பார். அதிகமாக வெறும் மேலுடன், வேட்டி அணிந்து தான் நடப்பார்.பழைய முறைப் படி ஒரு துணியில் கோவணம் கட்டுவார். அதை அவரே தோய்த்து உளர வைப்பார். வாயில் சுருட்டு இருக்கும் அவர் விரும்பி குடிப்பது பனம் கள்ளு. அவருக்கு விருப்பமானது ஒடியல் கூல். என் கந்தையா அப்பு, காதில் கடுக்கன் போடுவார் . தலைமயிரை சீவி குடும்பி வைப்பார். அதனால் அவரை
“குடும்பி கந்தையர்” என்று அடைப் பெயர் வைத்து ஊர்வாசிகள்அழைப்பர் . வேடிக்கை என்ன வென்றால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் வாலிபர்கள் கூட இப்போது காதில் தோடு போட்டு, குடும்பி வைக்கிறார்கள் . சிலர் மூக்கு, நாக்கு குத்துகிறார்கள்.

என் அப்புவுக்கு அவரின் பெற்றோர் முதுசமாக விட்டுச் சென்ற சொத்துகள் அதிகம் . அனலைதீவில் வயல் காணிகள், ஒரு பூர்வீக நாற் சாரம் வீடு . புங்குடுதீவில் சில கடைகள். நெடுந்தீவில் ஒரு வீடு எட்டாம் வகுப்போடு என் அப்பு படிப்பை நிறுத்திக் கொண்டார். அவருக்கு ஆங்கிலம் பேசவராது . தமிழ் எழுத வராது. ஆனால் கணக்கு பார்க்கத் தெரியும். ஊரில் மனக் கணிதத்தில் அவருக்கு நிகர் அவர் தான். அவரை ஒருவரும் காசு விசயத்தில் ஏமாற்ற முடியாது. அவருக்கு ஞாபக சக்தி அதிகம். பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் எல்லாம் அவர் நினனைவில் இருக்கும் .. அல்செய்மார் வியாதி பற்றி என் ஊர்வாசிகள் கேள்வி பட்டது குறைவு. அப்பு மருந்து குளுசைகள் பாவித்தது கிடையாது. அவருக்கு நீரழிவு வியாதி, இரத்த அழுத்தம் , இருதைய நோய் என்று ஒன்றும் கிடையாது. அவர் வைத்திய சாலைக்குப் போனதை நான் கண்டதில்லை. அதே போல் தான் என் ஆச்சியும்.


ஊர்வாசிகளுக்கு அப்பு கடன் கொடுப்பார் ஆனால் குறித்த காலத்தில் காசை குறைந்த வட்டியோடு வாங்கி விடுவார்.

அப்புவுக்கும் ஆச்சிக்கும் செல்லையா என்ற நான் ஒரு வாரிசு மட்டுமே. நான் அப்புவுக்கு ஆச்சிக்கும் செல்லம். நான் கேட்பதை வாங்கி கொடுத்து விடுவார்கள் .
என் அப்பு நல்ல நீச்சல்காரன். நான் தீவு வாசி என்பதால் எனக்கு அவசியம் நீந்தத் தெரிய வேண்டும் என்று நீந்தக் கற்றுக் கொடுத்தார் தான் படிக்க வில்லை என்ற குறை அப்புவின் மனதில் இருந்தது அதனால் நான் ஆங்கிலம் படித்து பெரும் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பது என் அப்புவின் ஆசை.
“அந்த கோதாரி விழுவான் போர்துகேயக்காரன் எங்கட தீவுக்கு வந்து சனங்களை
வேதக்காரராக மாற்ற முடியவில்லைல” என்று என் அப்பு பெருமையாகச் சொல்லுவார், அவருக்கு வேதக்காரர் மேல் ஒரு வெறுப்பு. அதனால் நான் இந்துக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது
அவர் கொள்கை . சில அனலைதீவு வாசிகளின் மகன்மார் போல் என்னையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அப்பு சேர்த்தார். கல்லூரி போர்டிங்கில் இருந்து படித்து, கொழும்பு பல் கலைக் கழகம் சென்று பொறியியலில் பட்டம் பெற்றேன். என் அப்பு தான் நினைத்தை சாதித்து விட்டதை பெருமையாக சொல்லி ஊரிலை சொல்லி தம்பட்டம் அடிப்பார். நான் கொழும்பில் வேலை செய்யும் போது லீவில் ஊருக்குப் போனால் என்னோடு சேர்ந்து பனம் கள்ளு. நண்டு, இறால் பொரியலோடு குடிப்பார். கடலில் நீந்துவார். நாங்கள் இருவரும் வயல் காணிகளை சுற்றி வருவோம் . அப்போது அவரைக் கண்டதும் சிலர் தங்கள் தலையில் கட்டிய சால்வை எடுத்து மடித்து தமது
அக்குளுக்குள வைத்து மரியாதை கொடுப்பதைக் கண்டேன் நான் ஊருக்குள்ளே சொந்தத்துக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்பது என் அப்புவுக்கும் ஆச்சிக்கும் ஆசை .

என் அப்பு ஒருபோதும் ஆச்சியை அவவின் பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை . மெய்யே அல்லது இங்காரும் என்றும், சில சமயம் குஞ்சு என்று கூப்பிடுவார். ஆக்சியும் அவரை உங்களைத்தான் அல்லது மெய்யே என்று கூப்பிடுவாள் .

என் ஆச்சி முத்தம்மா நல்ல சிவலை. நாலாம் வகுப்பு வரை படித்தவ. ஜாதகம் பார்ப்பாள் . அதை அம்மாச்சியிடம் இருந்து கற்றவ. சீட்டு பிடிப்பதில் கெட்டிக்காரி. ஆச்சியின் காதில் பெரும் இரு தங்கத் தோட்டு குண்டலங்கள் ஊஞ்சல் போல் தொங்கும் . அவள் மூக்கில் வைர மூக்குத்தி வேறு. பதினாறு வயதில் என் அப்புவை திருமணம் செய்தவ . ஒரு கலியாண வீட்டில் என் ஆச்சியை என் அப்பு கண்டு அவவின் அழகிலும், நிறத்திலும் மயங்கி ஆச்சியின் பெற்றோரிடன் பெண் கேட்டு போனவர் என் அப்பு. தூரத்து சொந்தக்காரனும், சொத்துக்காரனும் என்பதால் என் அப்புவுக்கு அவர்கள் தங்கள் மகளைக் கொடுக்கத் தயங்கவில்லை . அதோடு அப்புவின் பெரியப்பாவின், மருமகனின் , தம்பியின் மகள் என் ஆச்சி. ஊரிலை திருமணங்கள் எல்லாம் சுற்றி சுற்றி சுப்பரின் கொல்லைக்குள் தான் நடக்கும் . ஆச்சி ஒரு போதும் அப்புவை எதிர்த்துப் பேசியது இல்லை. சமையல் கூட அவரை கேட்டுத் தான் செய்வாள். அவர் சாப்பிட்ட பின் தான் சாப்பிபடுவாள், அவளுக்கு வீட்டுக்கு உதவிக்கு ஒருவரும் இல்லை ஆச்சிக்கு பல் விழ வில்லை. கூனல் இல்லை. கழுத்தில் எப்போதும் தாலிக் கொடியும் கையில் இரண்டு சோடித் தங்க காப்புகள் இருக்கும். அவளும் கொண்டை வைத்திருந்தாள். அவளுக்கு நான் ஒரே ஒரு அனலைதீவுவாசிகள் நீண்ட ஆயுள் உடையவர்கள். இதற்குக் காரணம் அசுத்தப்படாத சுற்றாடலில் வாழ்ந்ததினால் மட்டுமன்றி கடினமான விவசாயம் செய்த உழைப்பினால் ஆரோக்கியமான உடல் நலம் கொண்டவர்கள் அவர்கள், கவலையற்ற தன்னம்பிக்கையுள்ள வாழ்க்கையும் ஒரு காரணமாகலாம். அதோடு கூட அங்குள்ள மூலிகை வகைகளும் ஒரு காரணமாகயிருக்கலாம். இத்தீவிற்கு எக்காலத்தில் மக்கள் வந்து குடியேறினார்கள் என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஆனால் மற்றைய தீவுகளுடன் தொடர்பு இருந்தபடியால் நயினாதீவு, நெடுந்தீவு, புங்குடுதீவு வழியாக மக்கள் வந்து குடியேறியிருக்கலாம் என்பது ஒரு ஊகமாகும். இருபிட்டிக்கும் அனலைதீவுக்கும் இடையே உள்ள கடல் வரண்டு தரையாகக் காட்சியளித்த காலங்களில் மேய்ச்சலுக்கு தமது கால்நடைகளை அனலைதீவிற்கு அனுப்பி வந்தனர் இறுப்பிட்டி மக்கள். பினனர் அக்கால்நடைகளின் கொம்புகளிலும், கால்களிலும் உள்ள மண்ணின் தரத்தைக் கண்டு வியந்து, மக்கள் ஏழுமலை நாச்சியார் கோயிலடியில் குடியேறியிருக்கலாம். இன்றும் அனலைதீவு மக்களுக்கும் இறுப்பிட்டி மக்களுக்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு.அப்படி தமிழ் நாட்டில் உள்ள இராமநாதபுரத்தில் இருந்து வந்து குடியேறினவர்கள் எனது அப்புவின் மூதாதையர்.

அப்புவின் முன்னோர் ஒரு காலத்தில் இராமனாதபுரத்தில் இருந்து வந்து அனலைத் தீவில் குடியேறிய இந்து சமயவாதிகள் .
என் அப்புவின் தந்தை சுப்பையா நூற்றி மூன்று வருடங்கள் வரை வாழ்ந்தவர்.
என் அப்புவுக்கு இப்போ வயது எண்பது .இன்னும் பல் விழவில்லை. கூனல் இல்லை. பொல்லு பிடிக்காமல் இளந்தாரி போல் நடப்பார். அதிகமாக வெறும் மேலுடன், வேட்டி அணிந்து தான் நடப்பார்.பழைய முறைப் படி ஒரு துணியில் கோவணம் கட்டுவார். அதை அவரே தோய்த்து உளர வைப்பார். வாயில் சுருட்டு இருக்கும் அவர் விரும்பி குடிப்பது பனம் கள்ளு. அவருக்கு விருப்பமானது ஒடியல் கூல். என் கந்தையா அப்பு, காதில் கடுக்கன் போடுவார் . தலைமயிரைச் சீவி குடும்பி வைப்பார். அதனால் அவரை
“குடும்பி கந்தையர்” என்று அடைப் பெயர் வைத்து ஊர்வாசிகள்அழைப்பர் . வேடிக்கை என்ன வென்றால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் வாலிபர்கள் கூட இப்போது காதில் தோடு போட்டு, குடும்பி வைக்கிறார்கள் . சிலர் மூக்கு, நாக்கு குத்துகிறார்கள்.

என் அப்புவுக்கு அவரின் பெற்றோர் முதுசமாக விட்டுச் சென்ற சொத்துகள் அதிகம் . அனலைதீவில் வயல் காணிகள், ஒரு பூர்வீக நாற் சாரம் வீடு . புங்குடுதீவில் சில கடைகள். நெடுந்தீவில் ஒரு வீடு எட்டாம் வகுப்போடு என் அப்பு படிப்பை நிறுத்திக் கொண்டார். அவருக்கு ஆங்கிலம் பேசவராது . தமிழ் எழுத வராது. ஆனால் கணக்கு பார்க்கத் தெரியும். ஊரில் மனக் கணிதத்தில் அவருக்கு நிகர் அவர் தான். அவரை ஒருவரும் காசு விசயத்தில் ஏமாற்ற முடியாது. அவருக்கு ஞாபக சக்தி அதிகம். பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் எல்லாம் அவர் நினனைவில் இருக்கும் .. அல்செய்மார் வியாதி பற்றி என் ஊர்வாசிகள் கேள்விப் பட்டது குறைவு. அப்பு மருந்து குளுசைகள் பாவித்தது கிடையாது. அவருக்கு நீரழிவு வியாதி, இரத்த அழுத்தம் , இருதய நோய் என்று ஒன்றும் கிடையாது. அவர் வைத்திய சாலைக்குப் போனதை நான் கண்டதில்லை. அதே போல் தான் என் ஆச்சியும்.


ஊர்வாசிகளுக்கு அப்பு கடன் கொடுப்பார் ஆனால் குறித்த காலத்தில் காசை குறைந்த வட்டியோடு வாங்கி விடுவார்.

அப்புவுக்கும் ஆச்சிக்கும் செல்லையா என்ற நான் ஒரு வாரிசு மட்டுமே. நான் அப்புவுக்கு ஆச்சிக்கும் செல்லம். நான் கேட்பதை வாங்கி கொடுத்து விடுவார்கள் .
என் அப்பு நல்ல நீச்சல்காரன். நான் தீவு வாசி என்பதால் எனக்கு அவசியம் நீந்தத் தெரிய வேண்டும் என்று நீந்தக் கற்றுக் கொடுத்தார் தான் படிக்க வில்லை என்ற குறை அப்புவின் மனதில் இருந்தது அதனால் நான் ஆங்கிலம் படித்து பெரும் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பது என் அப்புவின் ஆசை.
“அந்த கோதாரி விழுவான் போர்துகேயக்காரன் எங்கட தீவுக்கு வந்து சனங்களை
வேதக்காரராக மாற்ற முடியவில்லைல” என்று என் அப்பு பெருமையாகச் சொல்லுவார், அவருக்கு வேதக்காரர் மேல் ஒரு வெறுப்பு. அதனால் நான் இந்துக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது
அவர் கொள்கை . சில அனலைதீவு வாசிகளின் மகன்மார் போல் என்னையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அப்பு சேர்த்தார். கல்லூரி போர்டிங்கில் இருந்து படித்து, கொழும்பு பல் கலைக் கழகம் சென்று பொறியியலில் பட்டம் பெற்றேன். என் அப்பு தான் நினைத்தை சாதித்து விட்டதைப் பெருமையாகச் சொல்லி ஊரிலை தம்பட்டம் அடிப்பார். நான் கொழும்பில் வேலை செய்யும் போது லீவில் ஊருக்குப் போனால் என்னோடு சேர்ந்து பனம் கள்ளு. நண்டு, இறால் பொரியலோடு குடிப்பார். கடலில் நீந்துவார். நாங்கள் இருவரும் வயல் காணிகளைச் சுற்றி வருவோம் . அப்போது அவரைக் கண்டதும் சிலர் தங்கள் தலையில் கட்டிய சால்வை எடுத்து மடித்து தமது
அக்குளுக்குள் வைத்து மரியாதை கொடுப்பதைக் கண்டேன் நான் ஊருக்குள்ளே சொந்தத்துக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்பது என் அப்புவுக்கும் ஆச்சிக்கும் ஆசை .

என் அப்பு ஒருபோதும் ஆச்சியை அவவின் பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை . மெய்யே அல்லது இங்காரும் என்றும், சில சமயம் குஞ்சு என்று கூப்பிடுவார். ஆச்சியும் அவரை உங்களைத்தான் அல்லது மெய்யே என்று கூப்பிடுவாள் .

என் ஆச்சி முத்தம்மா நல்ல சிவலை. நாலாம் வகுப்பு வரை படித்தவ. ஜாதகம் பார்ப்பாள் . அதை அம்மாச்சியிடம் இருந்து கற்றவ. சீட்டு பிடிப்பதில் கெட்டிக்காரி. ஆச்சியின் காதில் பெரும் இரு தங்கத் தோட்டு குண்டலங்கள் ஊஞ்சல் போல் தொங்கும் . அவள் மூக்கில் வைர மூக்குத்தி வேறு. பதினாறு வயதில் என் அப்பூவைத் திருமணம் செய்தவ . ஒரு கலியாண வீட்டில் என் ஆச்சியை என் அப்பு கண்டு அவவின் அழகிலும், நிறத்திலும் மயங்கி ஆச்சியின் பெற்றோரிடம் பெண் கேட்டுப் போனவர் என் அப்பு. தூரத்துச் சொந்தக்காரனும், சொத்துக்காரனும் என்பதால் என் அப்புவுக்கு அவர்கள் தங்கள் மகளைக் கொடுக்கத் தயங்கவில்லை . அதோடு அப்புவின் பெரியப்பாவின், மருமகனின் , தம்பியின் மகள் என் ஆச்சி. ஊரிலை திருமணங்கள் எல்லாம் சுற்றிச் சுற்றி சுப்பரின் கொல்லைக்குள் தான் நடக்கும் . ஆச்சி ஒரு போதும் அப்புவை எதிர்த்துப் பேசியது இல்லை. சமையல் கூட அவரை கேட்டுத் தான் செய்வாள். அவர் சாப்பிட்ட பின் தான் சாப்பிடுவாள், அவளுக்கு வீட்டுக்கு உதவிக்கு ஒருவரும் இல்லை ஆச்சிக்குப் பல் விழ வில்லை. கூனல் இல்லை. கழுத்தில் எப்போதும் தாலிக் கொடியும் கையில் இரண்டு சோடித் தங்க காப்புகள் இருக்கும். அவளும் கொண்டை வைத்திருந்தாள். அவளுக்கு நான் ஒரே ஒரு மகன் என்ற படியால் என் மேல் அவளுக்கு அளவற்ற பாசம். தனக்கும் அப்புவுக்கும் கொள்ளி வைப்பது நான் தான் என்று எனக்கு நினைவூட்டுவாள். நான் அவளுக்கு ஒரே மகன் என்ற படியால் என் மேல் அவளுக்கு அளவற்ற பாசம். தனக்கும் அப்புவுக்கும் கொள்ளி வைப்பது நான் தான் என்று எனக்கு நினைவூட்டுவாள்
சொந்தத்துக்குள் எனக்குத் திருமணம் செய்து வைக்கவே இருவரும் விரும்பினார்கள்.

கொழும்பில் நான் வேலை செய்த காலத்தில் , 1983 ஆண்டில் நடந்த இனக் கலவரத்தின் பின் புலம் பெயர்ந்து கனடா சென்றேன் அப்புவுக்கும் ஆச்சிக்கும் நான் கனடா போனது விருப்பம் இல்லை . ஆச்சி தன தம்பி மகள் செல்வியை எனக்குச் செய்து வைக்க திட்டம் போட்டிருந்தாள். சொத்து வெளியில் போக்கக் கூடாது என்பதும் ,சாதி சனம் பற்றி விசாரிக்கத் தேவை இல்லை என்பன முக்கிய காரணங்கள். அவர்களின் ஆசையைத் தீர்க்காமல் நான் கனடாவுக்குப் புலம் பெயர்ந்து விட்டேன் அங்கு எனக்கு நல்ல உத்தியோகம் . நல்ல சம்பளம். விலை உயர்ந்த இடத்தில் சொந்தத்தில் வீடு. கார் . என் ஊரில் உள்ள அப்புவின் பூர்வீக நூறு வருட நாற்சார வீட்டைத் திருத்தி பெரிய மாடி வீடாக கட்டஅப்புவுக்கும் நான் காசும் கடிதமும் அனுப்பியபோது எனக்கு ஒரு கடிதத்தோடு காசு திரும்பி வந்து விட்டது.
“விசர்க் கதை எழுதாதையடா நானும் உன் கொம்மாவும் உயிரோடு இருக்கும் மட்டும் இந்த விட்டிலை கை வைக்க விட மாட்டேன்” என்று ஊர் வைத்திலிங்கம் வாத்தியைக் கொண்டு என் கடிதத்துக்குப் பதில் போட்டார். எனக்குத் தெரியும் என் அப்புவின் பிடிவாதக் குணம் . நான் என் திட்டத்தை கை விட்டேன்

என்னைக் கனடாவிலிருந்து திரும்பி வந்து கெதியிலை செல்வியை திருமணம் செய்து தங்களுக்கு ஒரு பேரனையோ பேத்தியையோ பெற்றுத் தரும் படி கடிதத்தில் எழுதியிருந்தார்.
நான் கனடாவில் உள்ள என் ஊர்க்காரர்களோடு பழகுவதைத் தவிர்த்தேன் காரணம் அவர்கள் அப்புவுக்கு நான்
கனடாவில் என்னோடு வேலை செய்த கத்தோலிக்க வெள்ளைக்காரி ஒருத்தியைக் காதலித்து திருமணம் செய்ததாக எழுதிப் போடுவார்கள் என்ற பயம் வேறு.

என் மனைவி சில்வியாவுக்கு அப்பூவின் கடிதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னேன் . அவள் அதைக் கேட்டு “ டார்லிங் செல்லா நானும் நீங்களும் உங்கள் ஊருக்குப் போய் ஏன் பிரச்சனையை விலைக்கு வாங்குவான் உங்கள் அப்புவும் ஆச்சியும் நீங்கள் ஒரு கத்தோலிக்க வெள்ளைக்காரச்சியை தங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்தது தெரியாமல் இருக்கட்டும். அப்போ தான் அவர்கள் இன்னும் பல வருடங்கள் வாழ்வார்கள்” என்றாள்.
அந்த சமயம் வந்த என் மகள் ஜெசிந்தா “டடி எனக்கு ஸ்கூல் லீவு விட்டாச்சு. எப்போது உங்கள் உங்கள் ஊருக்குப் போய் உங்கள் டடியையும் மம்மியையும் பார்ப்பது”? என்று கேட்டாள்.
என்னால் அவளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

*****
( யாவும் புனைவு)
. .

எழுதியவர் : Pon Kulendiren (3-Apr-19, 1:47 am)
பார்வை : 108

மேலே