நிலவுப் பெண்

ஏதோ நினைக்கிறாய்
இதமாய் சுடுகிறாய்
இரவை இரசிக்கிறாய்
இன்பத்தை அளிக்கிறாய்

மெதுவாய் முளைக்கிறாய்
மேகம் கடக்கிறாய்
விண்மீன் தழுவுகிறாய்
விடியலில் கரைகிறாய்

கனவுகள் கொடுக்கிறாய்
காட்சிகள் தெளிக்கிறாய்
கருமேகம் மறைக்கிறாய்
கருப்பொருளாய் இருக்கிறாய்

கவிஞனை உயிர்பிக்கிறாய்
கவிதையை தருவிக்கிறாய்
வெட்கம் கொள்கிறாய்
வெறுமையாய் மறைகிறாய்

ஏக்கத்துடன் மெலிகிறாய்
தாகத்துடன் தளிர்க்கிறாய்
குளுமை கொடுக்கிறாய்
குழந்தைகளை மகிழ்விக்கிறாய்

காதலியாய் சுற்றுகிறாய்
காதலை தருகிறாய்
காலையில் மறைகிறாய்
மாலையில் உதிக்கின்றாய்

பெண்ணாக ஒளிர்கின்றாய்
வெண்மையாக சிரிக்கின்றாய்
நாணம் கொள்கின்றாய்
நீரில் தத்தளிக்கின்றாய்

அனைவருக்கும் அனைத்துமகி - நான்
அருகில் வரும்போது
தொலைவில் செல்கின்றாய்
தொலைவில் செல்ல
மௌனமாய் பின்தொடர்கின்றாய்...

எப்போது மௌனம்
தொலைப்பாய் நிலவுப் பெண்ணே...
உள்ளத்து உணர்வுகளை
உதிரமாக கொட்டிட...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (4-Apr-19, 8:22 am)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 438

மேலே