இல்லாள் பலங்கூடுமோ

சூழ்நிலை சரியாகுமோ சுக்கிலம் கருவாகுமோ
சுயம்புவாய் உள்ளறிவு பயிராகுமோ
இவ்வுலகில் எடுத்தப் பிறப்பு ஈடேறுமோ
பல துன்பம் பட்டுத்தெளிந்தவை கைக்கொடுக்குமோ
பரமன் எனக்கமைத்த பாதை ஒளித் தெரியுமோ
பாசக் கயிறுகளின் பலம் குறைந்து இலகுவாகுமோ
பக்கத்துணையான இல்லாள் பலங்கூடுமோ
பரமபத எண்ணத்தின் பாதை மாறி நிலையாகுமோ
எம் மக்கள் எந்நிலையையும் எதிர்கொள்வாரோ
எல்லா வினாவிற்கும் தென் மதுரை அரசனே துணை.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Apr-19, 4:55 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 67

மேலே