சவுக்கிதார்
அம்மா, எனக்கு கல்யாணமாகி
பத்து வருசம் கழிச்சி தவமிருந்து பெத்த பையன் பொறந்து ஒரு வாரம் ஆகுது. இன்னும் பேரைப் பதிவு பண்ணல. நானும் எவ்வளவோ யோசனை பண்ணிப் பாக்கறேன் நம்ம ஊருல பிள்ளைங்களுக்கு யாரும் வைக்காத இந்திப் பேரு கெடைக்கமாட்டங்குதே. நீ தான் எப்பவும் தொலைக்காட்சி பெட்டியே கதின்னு கெடக்கிறே. ஒரு புதுமையான இந்திப் பேராச் சொல்லும்மா.
@@@@@
மகனே மருது. இது தேர்தல் நேரம். அரசியல்வாதிங்க பேசறதை எல்லாம் தொலைக்காட்சிப் பொட்டில காட்டறாங்க. இப்ப புதுசா '"சவுக்கிதார்" -ங்கற பேரை அடிக்கடி சொல்லறாங்க. அந்தப் பேரையே எஞ் செல்லப் பேரனுக்கு வச்சிருடா.
@@@
அந்தப் பேருக்கு என்னம்மா அர்த்தம்?
@@@@
நம்ம ஊர்ல யாரும் இதுவரைக்கும் அர்த்தம் பாத்து இந்திப் பேர வச்சதில்ல. நீயும் அதுமாதிரி இருடா.
@@@@
"சவுக்கிதார்" - ரொம்ப அருமையான பேரு அம்மா. பேரு 'ர்' ல முடியறதால மரியாதை உள்ள பேரும்மா.