LAUGHING NOTA
ஆளுமையில்லை தலைமைஇல்லை
அந்தோபரிதாப அரசியல்வாதிகள் !
அடுக்கிவைத்த கரன்சியை கொடுத்துவிட்டால்
ஆட்சி நமது என்ற கோழிக்கனா !
அதிரடியாய் வருகிறார்கள் ரெய்டுக்கு
அள்ளிச் செல்கிறார்கள் ஆணையக்காரர்கள்
BLACK MONEY ன் BALANCE SHEET
தேர்தல் காலத்தில்தான் வெளிவரும் !
யார்கொடுத்தார் யார் கொடுக்கவில்லை
யாரைப் பிடித்தார் யாரைப் பிடிக்கவில்லை
ஊடக நங்கூரத்தார்கள் விவாதம் !
கறுப்புப் பணம் நாட்டு நன்மக்கள் கைபோய்சேர்ந்தால்
கருப்பும் வெண்பணம்தானே சமூக நலன்விரும்பியின் நோக்கம்
வேதனையில் தேர்தல் சோதனையில் வாக்காளப் பெருமக்கள்
யாருக்குத்தான் ஒட்டுப் போடுவது ?
நோட்டா மெல்லச் சிரிக்கிறது !