எங்கெங்கு காணினும் காதல்

மெல்லிய கீச்சாய் கேட்கிறது
வயலினின் ஓசை
இசைப்பவனின் முகத்தில்
அத்தனை பாவனைகள்
அத்தனை நேர்த்தி
அத்தனை தேடல்
அத்தனை காதல்
அந்த வயலின் மீது
அதன் கம்பிகளின் கீச்சின் மீது
அந்த இசையின் மீது இசைக்கும்
அந்த நொடியின் மீது வாழும்
அந்த வாழ்வின் மீது

ஒரு கணம் நான் அந்த வயலினாகி
அவன் காதலை உணரத் துடிக்கிறேன்
மறுகணம் அவனாகவே மாறி
அந்த வயலினைக் காதலிக்கத் தொடங்குகிறேன்

இசைத்தவன் கோவிந்த் வசந்தா
இசைக்கப்பட்டது காதலே காதலே

காண்பதெல்லாம் காதலடி

எழுதியவர் : mariselvam (4-Apr-19, 4:52 pm)
சேர்த்தது : Mariselvam
பார்வை : 36

மேலே