என்ன சொல்கிறாய்

விக்கித் திக்கி நிற்கிறேன் என்
காதலைச் சொல்வதற்கு
என் உள்ளத்தின் காயங்களைச் சொல்வதற்கு

திடீரென அழைக்கிறாய்
புன்னகைக்கிறாய்
தேநீர் கோப்பையை முன் வைக்கிறாய்
நீ ஒரு மிடறு அருந்துகிறாய்
உன் கோப்பையிலிருந்து
எனக்கு கண் ஜாடை காட்டுகிறாய் அருந்தென
என் கோப்பையில்
இதழ் பதித்து உறிஞ்சிக் குடிக்கையில்
திக்கிய வாயின் வழியே விக்கிய
தொண்டையில் இறங்காமல்
ஆலகால விசமாய் நிற்க வைக்கிறது
வெளியேற வேண்டிய சொற்கள்
இப்பொழுது கேட்கிறாய் என்னவானதென

என்ன சொல்வேன் நான்
உன்னை மணக்க விரும்புகிறேனென
உன் மடியில் உயிர் துறக்க விரும்புகிறேனென
உன் வயிற்றுக் குழந்தையாய் வளர விரும்புகிறேனென
கூடிக் களைத்து
ஊடிக் களைத்து
பெருகும் காதலில் கரைந்து
இப்படி ஒரு தேநீரை ஒரே கோப்பையில்
பகிர்ந்து கொள்ள வேண்டுமெனச்
சொல்லிவிட்டேன்

என்ன சொல்கிறாய் அம்மு நீ

எழுதியவர் : mariselvam (4-Apr-19, 4:51 pm)
சேர்த்தது : Mariselvam
Tanglish : yenna solkiraai
பார்வை : 46

மேலே