கனவு பலிக்கும்
பக்கத்திலே வந்து நின்று
பார்வையாலே என்னை துளைத்தாள்
காதல் சொல்லும் பார்வை அது
கண்கள் பேசும் பார்வை அது
நல்ல பிள்ளை நான்
நடுக்கத்தில் நெளிகின்றேன்
உடம்பும் வியர்வையாகி
விசுக்கென கண் விழித்தேன்
கனவாய் இருந்தாலும்
கனவு கான சொன்னவரை
மனதார மெச்சுகிறேன்
கனவுகள் பலிக்கட்டும்