மனித நேயமும் – உலக ஒருமைப்பாடும்

பூமித்தாயின் பரப்பளவை
நீயும் நானும் அளக்க வேண்டாம்

உனது எனது என்ற பேதமின்றி
நமது என்றே வாழ்ந்திடுவோம்

அணைத்து தேச மக்களுமே
அவரவர் தேசத்தின் குழைந்தைகள் தான்

தேசபக்தி எனும் உணர்வு
நம் உத்திரத்தில் என்றும் உள்ளதுதான்

நமது தோலின் நிறங்கள் மாறிடலாம்
உள்ளத்தின் எண்ணங்கள் மாறிடலாம்

செய்யும் செய்கையும் மாறிடலாம்
பேசும் மொழியும் மாறிடலாம்

இத்தனை விஷயங்கள் மாறினாலும்
மாறாது இருப்பது ஒன்று உண்டு

உதிரத்தின் நிறத்தை சொல்லுகிறேன்
உண்மையும் அதுதான் சிந்திப்பீர்

இதில் ஒளிந்திருக்கும் உட்பொருளை
அறியாத நம் இனத்தை என்சொல்ல

உழைத்து வாழ்ந்தால் சுகமுண்டு
உன் உழைப்பை மதிப்பவர் பலருண்டு

வேலை நிமித்தமாய் இடம்பெயர்ந்து
உறவை பிரிந்து செல்பவர்கள்

வேறு தேசத்தில் தஞ்சம் அடைந்து
அங்கேயே அடைக்கலம் பெறுவதுண்டு

அடைக்கலம் தேடி வந்தவரை
அரவணைப்பதே மனித நேயம்

நம் மண்ணில் கால் பதித்தவரை
நம்முள் ஒருவராய் எண்ணவேண்டும்

அவர்களின் பாதுகாப்பிற்கு அத்தேசம்
உறுதுணையாய் இருக்கவேண்டும்

அவர்களும் அந்நாட்டு பிரஜைகள் தான்
என்ற போக்கு அந்த மக்களுக்கும் வரவேண்டும்

அவர்கள் போர் புரிவதற்கு வரவில்லை
பிழைப்பை தேடி வந்தவர்கள்

நாட்டில் பயங்கரம் வந்தாலும்
இயற்கை பேரழிவு நடந்தாலும்

தீவிரவாத வெறி செயலாய் இருந்தாலும்
வேறு எதுவாக இருந்தாலும்

பாதிக்கப் பட்ட மக்களுக்குள்
வேற்றுமை பார்க்கக் கூடாது

ஒரு தேசத்தில் வாழும் யாவரையும்
சக உறவாய் பார்ப்பதே மனித பண்பு

அமைதி என்பதே ஆனந்தம்
உதவி மனப்பான்மை ஆனந்தம்

மற்றவர் துயரை துடைப்பதுவும்
உலக சமாதானம் விரும்புவதும்

பேரானந்த உணர்வின் ஒரு நிலையே
மகிழ்ச்சியின் உச்சமும் அதுவேதான்

பிறப்பு என்பது தொடக்கம் என்றால்
இறப்பு என்பது முடிவாகும்

இடைப்பட்ட நாட்கள் நம்கையில்
அது அர்த்தமுள்ளதாக இருக்கட்டுமே

ஜாதி மதங்களை சற்றே புறம் தள்ளி
ஒரு நாட்டின் இன உணர்வை ஒதுக்கி வைத்து
போட்டி, பொறாமையை விரட்டி விட்டு
விருப்பு வெறுப்புகளை கூட்டிக் கழித்து
காமம் குரோதத்தை அண்டவிடாமல்
தீய எண்ணங்களுக்கு விடை கொடுத்து

சக மனிதரை மனிதராய் மட்டுமே
பார்க்க நாமும் கற்றுக் கொண்டால்
மனித நேயமும் மலர்ந்திடுமே
உலக ஒருமைப்பாடும் புலர்ந்திடுமே.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (4-Apr-19, 9:10 pm)
பார்வை : 34

மேலே