பிரிவு

கணவாய் தோன்றினாய்...
இமைகள் கடந்து .....
இதயம் நுழைந்தாய்
காற்றோடு பல கதைகள்
கற்பனை தோறும் உன் பிம்பங்கள் .....
தாமரை இலையின் நீர் போல ஒட்டாமல் விலகி கொன்டே இருந்தாய்
நாட்கள் மேகமாய் நகர்ந்தன
பூமி எங்கும் காதல் மலர்கள் பூக்க
கடல் அலை இரண்டும் உன் பாத சுவடை தொட்டணைத்தன ...
மர இலைகள் எல்லாம் உன் பெயரை உச்சரித்தன ...
நிசப்த இரவில்
தனிமையில் நான் ...
நீண்ட நேரத்துக்கு பின்னால்
என்றும் பௌர்ணமி நிலவாய் இருப்பவள் என் அருகில் பிறை நிலவாய் வந்தால்
என் வார்த்தைகளுக்கு எல்லாம் அவள் பதிலகள் மௌனம் மட்டுமே .....
கண்ணீர் இடைவெளியில்
அவள் பேசிய ஓரிரு வார்த்தைகளில்
என் இதயம் ஓராயிரம் முறை செத்து பிழைத்தன .....
உன்னுடன் மட்டுமே என் இறுதி நாட்கள் என்று சொன்னவள்
இன்று இறுதியாய் இரு இதயம் பிரிந்து விடலாம் என விடை கொடுத்தால்

எழுதியவர் : செந்தில் குமார் அ (5-Apr-19, 3:10 pm)
சேர்த்தது : sendil
Tanglish : pirivu
பார்வை : 1067

மேலே